சிறுகதைகள்
Trending

சர்க்கரைப்பாகும் தேன்துளியும் – பிரதீப் சிவபெருமான்

சிறுகதை | வாசகசாலை

இப்போது நான் புலம்புகிறேன் என்றால் காரணம் சற்றுமுன் கண்ட கனவுதான்…. இந்த பயமும்… எழுச்சியும்…. த்த்த்த்தா மாதர்ச்சோத்….. ஒரு நிமிடம்…..

சரி…. கனவுகளை வெறுமனே கனவுதான் என துச்சமாய் கருதி புறந்தள்ளும் யதார்த்தவாதி அல்ல நான்! கனவுகளின் உட்பொருளை, அது சொல்ல எத்தனிப்பதை, கனவு தரும் சுகானுபவத்தை அனுபவித்து இன்புறும் அசாத்தியவாதி நான்!

இப்போது உங்கள் காதுகளில் ஒன்றை கிசுகிசுக்கபோகிறேன். ரகசியமாய் வைத்துகொள்வீர்கள் என நம்பியே இதை முணுமுணுக்கிறேன், ஒருவேளை என் முணுமுணுப்பை நீங்கள் பகிரங்கபடுத்தி, சாதனை செய்துவிட்ட எண்ணத்துடன் சிரிப்பீர்களானால், உங்கள் அகமுகத்துக்கு நேராகவே சொல்கிறேன்,,,, ‘துளியும் வெட்கபடமாட்டேன்’…

சரி சரி உற்று கவனியுங்கள்….. ‘’உடலுறவு கொள்வது போல் வரும் கனவுகளால் விந்து விரையமாகி தொடையை நனைப்பதை விரும்புபவன் நான்’’

ஹா…..ஹா…. ஹா….. நேற்று இரவு ஜி.நாகராஜனின் ‘பூர்வாசிரமம்’ சிறுகதையை படித்துகொண்டிருந்தேன். கதையின் ஓரிடத்தில் ‘அவசரமா?’ என விபச்சாரியான பஞ்சவர்ணத்தம்மா கதாநாயகனிடம் கேட்டுகொண்டே கையை கட்டிலின் பின்நுனியில் விறைப்பாக அழுத்தியபோது, என்னை அறியாமலேயே உறங்கிவிட்டேன். அதன்பின்தான் மெல்ல அந்த கனவிற்குள் சஞ்சரித்தேன்.

ஒளிபிரபையான ஆனால் சற்று மங்கலான, சிறுசாரல் போல் (ஸ்ப்ரே செய்யும்போது வரும் தண்ணீர் அளவுக்கு) நீர் பறக்க, மேககூட்டமோ, புகைமூட்டமோ அதற்கு மத்தியில், முதுகுக்கு கீழ் பின்தொடைவரை நீளமான, தங்கநிற சாயமடித்த கூந்தலை தொங்விட்டபடி ஒரு இளம்பெண் முதுகைகாட்டி நின்றுகொண்டிருந்தாள். எனக்கு எதிர்புறமாக திரும்பிநின்றவள் என் பார்வையை தன் ஸ்பரிசத்தில் உணர்ந்து சட்டென கூந்தலை லாவகமாக முன்னால் தூக்கி போட்டபடி தன் முதுகை எனக்கு முழுவதும் காட்டினாள். உடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகதான் இருந்தாள். அவள் தன் முகத்தை காட்ட தயாராக இல்லாதது போல் தெரிந்தது. என் பார்வை அவள் உடலில்படும் இடமெல்லாம் புல்லரித்து சிறுசிறு குமிழ்கள் தோன்றி மறைந்தன! என் கண்களுக்கு அவள் பூவுடல் அணுக்கமாவதை உணர்ந்தேன்.

காற்றிலோ அல்லது இயற்கையாகவோ அவளது தங்கநிறகூந்தல் மெல்ல நெளிந்தும், அசைந்தும் புவிஈர்ப்பு விசை இல்லாத அந்த இடத்தில் மிதந்து கொண்டிருந்தது. குண்டலினியை எழுப்பியவளோ என்னவோ தெரியவில்லை அவள் குதம் தொடங்கி கீழ்முதுகு வழி நடுமுதுகில் படர்ந்து பின்கழுத்து மேல் ஏறி தலைக்குள் சென்று மறைந்தவாறு ஒரு சிவப்பு நரம்பு பிராகாசமாக பளபளத்து கொண்டிருந்தது. அவளது வெள்ளை உடல் என்னை முகம் கோணச்செய்தது. பொதுவாக நான் சற்று பொன்னிற மேனியை விரும்புபவன். அட என்ன இது!… நான் நினைத்தது கேட்டுவிட்டதா… என் கண்முன்னால் அவள் உடல் நான் விரும்பும் பொன்னிறத்திற்கு மாறிவிட்டது!

உடல் கூசி பரபரப்பானேன். எனக்காகவே படைக்கபட்ட மற்றொரு உடலா? எனது உணர்வுகளுக்கு கட்டுபடும் என் உடல் போலவே, இவளது உடலும் எனது கட்டளைகளுக்கு  கீழ்படியுமா? அப்படியென்றால் என்னவள் இவள்தானா? பின் எப்படி ஒரு நன்கு பழகிய குதிரையைப்போல் என் அகஉணர்வுக்கு ஏற்றவாறு அவள் தன் அங்கஅசைவுகளை மாற்றி கொள்கிறாள்?

அப்போதுதான் என் முதுகு சில்லிட்டு குதிகாலிருந்து ஒரு உணர்வு உச்சந்தலையை அறைய, ஒரு நரம்பு கட்டவிழ்ந்து அந்த கேள்வி எழுந்தது. ‘’நான் ஏன் இன்னும் அவளை நெருங்கி செல்லலாமல் இருக்கிறேன்? நான் ஏன் இன்னும் அப்பொன்னுடலை அணைக்காமல் இருக்கிறேன்? நான் ஏன் இன்னும் அவளை மடியில் கிடத்தி, கொஞ்சி குலாவாமல் இருக்கிறேன்? நான் ஏன் அவள் உடல் முழுக்க முத்தங்கள் தராமல் இருக்கிறேன்? பொக்கிஷம் அல்லவா இது! எளிதில் விடமுடியுமா? பின்னழுக்கே பிரக்ஞை பித்தாகி பைத்தியம் பிடிக்கிறதே? இன்னும் முன்னழகு வேறு பாக்கி இருக்கிறதே! பார்த்த நொடி சீவன் இழப்பேனோ? அங்கம், அங்கமாக கூர்ந்து நோக்கி, தொட்டு, முத்தமிட்டு கொண்டாட வேண்டாமா? அபிஷேகம் செய்து பூசிக்க வேண்டாமா? அவள் சிணுங்கல் ஏற்படுத்தும் போதையில் கிறுகிறுத்து, அவள் தரும் முத்தத்தில் வரும் எச்சிலில் மீண்டும் உணர்வு பெற்று, அவள் முன் மண்டியிட்டு, துச்சமான இவ்வுயிரை அவள் பாதத்தில் வீசி எறிய வேண்டாமா?

வணங்கி ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைத்தபோதுதான் என் அடிவயிற்றில் அவ்வலியை உணர்ந்தேன். சிறுநீர் முட்டிகொண்டு வரும் வலி. மூச்சுவாங்க, வியர்வை வடிய எழுந்து படுக்கையில் அமர்ந்தேன். அவசரமாக கழிவறை சென்று சிறுநீர் கழித்தேன். சுயமைத்துனம் செய்யவேண்டும் என்ற உணர்வு வர அடக்கிகொண்டேன். மீண்டும் வந்து கட்டிலில் அமர்ந்தபோது மணி விடிகாலை 1;30. என் கனவை கலைத்த அந்த நொடிக்காக, முட்டிய சிறுநீருக்காக என் பிறப்புறுப்பை வெறுத்தேன். சிறுநீர் இயக்கத்தை வெறுத்தேன். சாபம் கொடுக்க போனபோதுதான் சுதாகரித்து கொண்டேன். நான் கனவுகளில் சஞ்சரிப்பவனாதலால் இந்த அனுபவங்களை பலமுறை அடைந்துள்ளேன். அந்த கனவின் கடைசி நிகழ்வை நினைத்தபடி படுத்தால், மீண்டும் விட்ட இடத்திலிருந்தோ, சற்று முன்னாலிருந்தோ தொடர முடியும். உடனே படுத்தேன், தங்கநிற கூந்தலையும், அகன்ற பொன்னிற முதுகின் பளபளப்பையும், இடையின் பானை போன்ற நெளிவையும், பின்தொடை சதைபிடிப்பையும் மெல்ல நினைவுக்கு கொண்டு வந்தவாறு கண்களை மூடினேன்….. அதிசயகதவு திறந்தது…..

இன்னும் அவள் முதுகை காட்டியபடி திரும்பாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தாள்! எழுச்சி உச்சத்துக்கு செல்ல அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கபோன போதுதான் எனக்கும் அவளுக்கும் இடம்வலமாக இரண்டு ஒளிகற்றைகள் பாய்ந்து கொண்டிருப்பதை கவனித்தேன்! பெரிய உருளை அளவிலான அந்த ஒளிகற்றைகள் ஒன்று சிவப்பாகவும், மற்றொன்று பச்சையாகவும் மின்னல் வேகத்தில் எங்களை கடந்து முன்னோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. அதை நெருங்கியபோதுதான் ஒரு விஷயம் தெளிவானது. அது வெறும் ஒளிகற்றை அல்ல, ஒரு மனிதனின் பிறப்பு தொடங்கி அவன் இறக்கும் வரை மொத்த வாழ்க்கையின் முழு தகவலையும் பதிந்து வைத்துள்ள புளூபிரிண்ட் அல்லது காலக்கோடு என்பதை புரிந்து கொண்டேன். இது காலக்கோடு என எனக்கு எப்படி தெரிகிறது. ஆச்சரியமடைந்தேன்.

பச்சைநிற காலக்கோட்டை உற்றுப்பார்த்தேன். என்னுடைய  வாழ்க்கையில் இதுவரை நடந்த, இனி நடக்கப்போகிற, எனது 1 வயதிலிருந்து, தற்போது வரை நடந்த சம்பவங்களும், நினைவுகளும், சிறுசிறு பெட்டிகளில் காணொலிகளாக ஒடியபடி அந்த காலக்கோட்டுக்குள் மிதந்து கொண்டிருந்தன! தற்போது 18 வயதில் இருக்கும் நான் 20 வயதில் கல்லூரி படிப்பை முடித்து, 22 வயதில் வேலைக்கு சேர்ந்து, 26 வயதில் சொந்தவீடு, சுயதொழில், கார் என செட்டில் ஆகி, 27 வயதில் இப்போது என் முன்னால் நிற்கும் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் காட்டியது. மொத்தமாக அவள் அருகில் நான் செல்ல காலவிதிமுறைப்படி இன்னும் 9 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என நாசூக்காக கூறியது.

சிவப்பு காலக்கோட்டை எட்டி பார்த்தேன். என் முன்னால் நிற்பவளின் அல்லது 9 வருடங்கள் கழித்து எனக்கு மனைவியாக வரபோகிறவளின் வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் நினைவுகள் மொத்தமும் சிறுசிறு பெட்டிகளாய் மிதந்து கொண்டிருந்தன! தற்போது 16 வயதில் இருக்கும் அவள் 17 வயதில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல், 23 வயதுவரை வீட்டில் வெட்டியாக இருந்து, 24 வயதில் நான் சொந்தமாக நடத்தும் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்து, அங்கு என்னுடன் காதலாகி, 25 வயதில் இருவீட்டார் சம்மதத்துடன் சீறும், சிறப்புமாக எங்கள் இருவருக்கும் திருமணம் நடப்பது போல் காட்டியது. அவளும் என்னை நெருங்க இன்னும் 9 வருடங்கள் இருந்தன. இருவரின் கணக்கும் துல்லியமாக மிக சரியாக இருந்தது. படைப்பின் எழுத்தும் செவ்வென அமைந்திருந்தது.

யோசனைக்கு பின் மீண்டும் காலக்கோட்டை உற்று நோக்கினேன். முதலிரவில் எங்கள் கன்னிதன்மையை பரஸ்பரம் இழந்த அழகான கணம்.  பின் அவள் கருத்தரித்த செய்தி கேட்டு என் அம்மா விருந்து ஏற்பாடு செய்கிறாள். வளைகாப்பு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மருத்துவமனையில் பிரசவ வலியால் அவள் துடிப்பதை கண்டு நான் வடித்த கண்ணீர் சுவடுகள். அழகாக பிறந்த ஆண்குழந்தை. எங்கள் குழந்தையுடன் நாங்கள் கழிக்கும் விலைமதிப்பில்லா அற்புதமான கணங்கள். அதோடு என் தொழிலும் அடுத்த கட்டத்துக்கு முன்னேற, எந்த கவலையும் இல்லாமல் எங்கள் மொத்த வாழ்க்கையும் அழகானதாக அமைய பெற்றிருப்பதை காலக்கோடு காட்டியது.

எங்கள் இருவரின் வாழ்க்கையையும் இறைவன் எவ்வளவு அழகாக கட்டமைத்துள்ளார் என நினைத்தபோது உயிரை இறைவனுக்கு தர மனம் அவசரபட்டது. படைப்பின் அழகான இந்த கட்டமைப்பு, அது ஆணுக்கும், பெண்ணுக்கும் வகுத்துள்ள விதி, ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தேன். காதலும், காமமும் வாழ்வதற்கே. ஆனால் என்நிலை உயர்ந்து, பின் காலஅளவு கனிந்து, இனி எல்லாம் சுகமே என மனம் எண்ணும் அந்த கணம், புரியும் காதலும், காமமும் சரியானது என மனம் புரிந்துகொண்டது. இனி அவளை அவசரப்பட்டு நெருங்குவதில்லை என்றும், அவளுக்காக 9 வருடங்கள் காத்திருக்கவும் முடிவு செய்து மெல்ல நிமிர்ந்தேன்.

அவளை பார்க்காமல் பின்னோக்கி செல்ல எத்தனித்த போததான் அந்த மாயஅலைவரிசைகளை என் பின்கழுத்தில் உணர்ந்தேன். என் உடலெங்கும் பரவிய அந்த அதிர்வலை என் உடலை அதிரச்செய்து, என் மேனியின் உரோமங்களை எழ செய்ததோடு, பல புல்லரிப்பு குமிழிகளை என் மேனியெங்கும் உருவாக்க, உடலுக்குள் இனம் புரியாத இன்பநுரைகள் பொங்கி எழ மெல்ல திரும்பி பார்த்தேன்…..

அவள் நிர்வாணமாய் என்னை தோக்கி திரும்பி நின்று குழிவிழும் கன்னத்தால் சிறிதாக புன்னகைத்து கொண்டிருந்தாள். மோகன பார்வையால் என் ஆடைகளை களைத்து, என்னை நிர்வாணபடுத்தினாள். அவள் கண்களை என் உடலின் ஒவ்வொரு தசையிலும் உணர, உணர எனக்குள் பெரும் இன்பசித்திரவதையை அனுபவிக்க ஆரம்பித்தேன்.

உள்ளே ஒரு குரல், ‘அவளை காலக்கோட்டை பார்க்க சொல், இன்னும் 9 வருடங்கள் காத்திருந்தால் அற்புதமான வாழ்க்கை கிடைக்கும் என்று சொல், அவசரப்படாதே இந்த வயதில் வேண்டாம் என சொல்’ என்று கூக்குரலிட்டது. ஆனால் இதை சொல்ல வேண்டிய எனது உதடுகளோ அவளை முத்தமிட தயாராகி கொண்டிருந்தன! கண்கள் உண்மை பேசுமே புரிந்துகொள்வாள் என எண்ணிய நேரம், என் அக்னி கண்கள் அவள் பொன் அங்கங்களை சிவந்துபோக வைத்து கொண்டிருந்தன? சிறிய கழுத்தையும், கழுத்தை சுற்றி பரவிகிடந்து உணர்வுநிலையை கதிகலங்க செய்யும் மெல்லிய பூனைமுடியையும், பதினாறு வயதிற்கேயுரிய சிறிய ஆனால் கூரான கொங்கைகளையும், மெல்லிடையின் வளைவு, நெளிவையும், அதன்கீழ் உரோமவழி சிவந்த யோனியையும், தொடை திரட்சியையும், நீட்டியும் நிமர்ந்தும் மேகத்தின் மேல் தாளமிடும் குட்டிபாதங்களையும் கண்டு மோகத்தீ பற்றி எறிய, மொத்த உடலே திமிறி எழந்தது.  அவளை நோக்கி நான் வருவதை கண்டு, வேட்கை தகிக்கும் உதடுகளை கடித்தவாறு அவள் என்னை நெருங்கினாள்.

அந்த கணம் எங்கள் இருவரின் காலக்கோடுகளும் நிலநடுக்கத்தில் அதிர்வது போல் அதிர ஆரம்பித்தன. முன்னால் சென்ற காலக்கோடுகள் எங்கள் உணர்வுநிலைக்கேற்றவாறு பின்னோக்கி வர ஆரம்பித்தன! நாங்கள் நெருங்க நெருங்க காலகோடுகள் மிக வேகமாக பின்னோக்கி வந்து கொண்டிருந்தன. அவளை நெருங்கி என் கைகளால் அவள் இடையை பற்ற, அவளின் முணகல் ஏற்படுத்திய போதையில், அவளை என் உடலுடன் அழுத்தி நெருக்கி அவள் உதட்டில் முத்தங்களை ஆழமாக பதிக்க, எங்கள் இருவரின் காலகோடுகளும் வெடித்து சிதற ஆரம்பித்தன. விதி என்பது மனிதமதியால் அல்லது காமத்தால் தவறானதால் காலக்கோடு மிகபெரிய அதிர்வுடன் நாலாபுறமும் வெடித்து, பல வண்ணக்குலைவுகள் பீரிட்டு தெறிக்க ஆரம்பித்தன. அவை ஒன்றுடன் ஒன்று கலந்து புதிது, புதிதாய் பூமியிலேயே இல்லாத வண்ணங்களாய் மாற ஆரம்பித்தன. அவ்வண்ணங்கள் எங்களை சுற்றி பல பாம்புகள் போல் சுழல ஆரம்பித்தன! எங்கள் உறுப்புகள் ஒருசேர, வியர்வைகள் கலக்க, உணர்வுகள் ஒன்றாக, உடல் என்னும் கூட்டை உடைத்து இரு ஆன்மாவும் ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைய, நாங்கள் இருவரும் வண்ணக்கலைவகளுக்கு மத்தியில் அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தோம். பிரபஞ்சத்தின் மிகபெரிய புணர்வை பால்வழியில் நிகழ்த்தி கொண்டிருந்தோம். ஒருவருடன் ஒருவர் கலந்தோம், கட்டுப்பாடுகள் உடைத்தோம், நிர்வான உடல்களின் பிணைவில் சுரந்த மதுவை குடித்து போதையேறி சகலத்தையும் மறந்து, அத்தனையும் துறந்து பித்துநிலை எய்தினோம்.

இன்னும்……. இன்னும்……. இன்னும்……. இது முடியகூடாது……. இந்த கணம் பல நூற்றாண்டுகள் தொடரவேண்டும்…… இந்த புணர்வு பல யுகங்களுக்கு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டும்………

புணர்வின் வழியே கட்டியணைத்திருக்கும் அவளின் கூந்தல் வழியே சிவந்துபோன என் ஒரு கண்ணால் பார்க்க……… காலக்கோடு என் முன்னால் புதுபிக்கபட்டு கொண்டிருந்தது. எல்லாமே மாறிக்கொண்டிருந்தது. எங்களின் அவசரத்தால் விதி எங்கள் இருவரையும் தண்டிக்க ஆரம்பத்தது. மாற்றுவிதி திருத்தப்பட்டு தண்டனை தீர்ப்பு எழுதப்பட்டது.

எனக்கு 18 வயது, அவளுக்கு 16…… பள்ளியில் புரியாமல் வந்த காதலால் புதருக்குள் புரண்டு பாம்பு போல் புணர்ந்து கொண்டிருந்தோம். வயிற்றில் வளர்ந்த சிசுவுக்காக சண்டையிட்டோம், இருவீட்டாரால் துரத்தி அடிக்கபட்டோம், அவமானம் எனும் வேலை செய்து, கஷ்டம் எனும் உணவை உண்டோம். பிறந்த சிசுவை கந்தல் துனியால் மூடி எங்கள் வீடான ரோட்டோரத்தில் கிடத்தியிருந்தோம். தினம் சண்டையிட்டோம். காமம் எனும் மாயபிம்பம் மறைந்து உணவு, வயது, பணம், படிப்பு, வேலை என்ற யதார்த்தங்களை புரிந்து, பக்குவம் இல்லாத வயதில், புதரில் புணர்ந்த கணத்தை எண்ணி சபித்தோம். இருப்பினும் இந்த இடைவெளியிலும் அவசரத்தில் இன்னொரு சிசுவை பெற்றெடுத்தோம். துன்பத்தை தாங்கமுடியாமல், உணர்வை அடக்க முடியாமல், நிலை இன்னும் மோசமாக, கண்இமைகளை எப்போதும் அந்த காமநினைவு அறுத்துக்கொண்டிருக்க, இழந்த வாழ்க்கைக்காக கதறி அழுதோம். தற்கொலை செய்யலாம் என விஷபாட்டில்………….

சட்டென எழுந்து அமர்ந்தேன். வியர்வையை துடைத்து பெருமூச்சுவிட்டேன். பழகாத பயமொன்றை படபடப்பான மனதின் அடியாழத்தில் உணர்ந்தேன். ‘த்த்த்தாதாதா கனவு’, மெல்ல அமைதியானேன் தொடையை நனைத்திருந்த விந்தின் ஈரத்தை முதல்முறை ‘பயத்துடன்’ தொட்டு பார்த்தேன்.

……..ஷ்ஷ்ஷ்ஷ் செப்ப்ப்பா………

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. Very matured thought and illustrative narration.. This story is going to be all time trigger for youngsters who miss leads their life. I wish you to bring like this lot…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close