கட்டுரைகள்

“அஞ்சு, போராடு, பிழைத்திரு”- வைரஸ் திரைப்படம் குறித்த கண்ணோட்டம்

-வெங்கடேஷ்

 

இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாகப் பேசப்படும், செயல்பட ஆலோசனை கூறும் திட்ட அறிக்கைகள், நிவாரணங்கள் என பொழுதொன்றுக்கு ஒரு செய்தியென பரபரப்பாக இருக்கும் இச்சூழலில், வைரஸ் திரைப்படம், ஏற்கனவே ஒரு வைரஸை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற ஒரு அரசின், ஒரு மாநிலத்தின் கதை.

கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டலில் தொடங்கும் கதை, முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் கூட்டிச் செல்கிறது. நம் அடுத்த 2 மணி நேரம் 28 நிமிடத்தை படம் தனதாக்கிக் கொள்கிறது. எந்நேரமும் Documentary-ஆக  சென்றுவிடலாம் என்ற அச்சம் எனக்குள் தொத்திக் கொள்ள, இயக்குநர் அதற்கு இடம் தராமல் நேர்த்தியான கதை நகர்த்தலின் வழியே நம்மை இருக்கையின் நுனியிலேயே வைத்திருக்கிறார்.

இதில் பார்வதி, தோவினோ தோமஸ், குஞ்சக போபன், ரஹ்மான், ரேவதி என ஒரு பட்டாளமே நடித்திருக்கையில் ஒரு இடத்திலும் நடிகர் என்ற எண்ணமே தோன்றாமல் அனைவரும் தன் கதாப்பாத்திரத்தை சரியாக செய்துவிட்டு நகர்கிறார்கள். 

படத்தில் நிறைய medical terms இருந்தாலும் எல்லாவற்றையும் உணர்வின் மூலமாகக் கடத்தியிருப்பது கலையின் ஆச்சரியம். Patient ஜக்காரியா முதல் உன்னிகிருஷ்ணன் வரை உள்ள cluster-ஐ கண்டுபிடிக்க அவர்கள் மேற்கொள்ளும் விசாரணை மிகவும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், நிப்பா வைரஸின் அறிகுறிகளைக் காண்பித்ததும், அதற்கான WHO protocol-ஐ காண்பித்ததும், அரசிற்கு ஏற்படும் நெருக்கடிகளை, அதை சமாளிக்க அரசு எடுத்த முடிவு என எல்லாவற்றையும் கச்சிதமாகப் படமாக்கியுள்ளனர்.

பின்னணி இசை நம்மை இந்தப் படத்தில் எப்போதும் ஒன்றியிருக்கச் செய்கிறது, editing-ல் மிக நேர்த்தியான வெட்டுகளைப் பார்க்க முடிகிறது. ஒரு காட்சியை காண்பித்து விட்டு அதைப் போகிற போக்கில் அடுத்த அடுத்த காட்சியில் விளங்க வைப்பது, சிறப்பு.

கடைசியாக மேடையில், டீச்சர் என அழைக்கப்படும் பிரமீலா, health minister (ரேவதி) கூறுகையில், “ஒருவர் நோயால் சிரமப்படும் போது உதவியவர்களுக்கும் நோய் பரவியது, இன்று நாம் அடுத்தடுத்து அமர்ந்திருக்கிறோம், அதற்கு தயார்படுத்தியது ஒற்றுமையான போராட்டம் தான்”, தொற்று நோயின் பயங்கரத்தை நம் கண் முன் காட்டி அதிலிருந்து மீண்ட வெற்றியை இறந்தவர்களுக்கு காணிக்கையாக்கி, இறுதியில் நிப்பா வவ்வாலின் வழி பரவியது எப்படி என்று காண்பிக்க படம் நிறைவு பெறுகிறது. 

இன்றைய தினத்தில் சமூக தனிமைப் படுத்தலையும், protocol-ஐ பின்பற்றுவதன் அவசியத்தையும் ஒரு படம் நம் கண்முன் சமர்பிக்கிறது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close