வளன்

 • இணைய இதழ்

  அந்நியநிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 23

  என்னை நியூ யார்க் நகரத்துக்கு அழைத்துச் சென்ற பால் கிளிஃபர்ட் செப்டம்பர் 11 தாக்குதல் சமயத்தில் மீட்புப் பணிகளில் சேவையாற்றியவர். ஆக உலக வர்த்தக மையம் எங்கள் பயணத்தின் மையமாக இருந்தது. புதிதாக எழுப்பப்பட்டிருக்கும் வர்த்தக மையம் ஒற்றை கோபுரமாக நிற்கிறது.…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 22

  நியூ யார்க் நகரம் நமக்குக் கிடைக்கும் வடஅமெரிக்க பிம்பம் ஒரு சில நகரங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆனால் நிஜத்தில் இது ஒரு மாபெரும் தேசம். கிழக்குக் கரையில் அட்லாண்டிக் மகா சமுத்திரமும் மேற்குக் கரையில் பசிஃபிக் மகா சமுத்திரமும் இருக்கிறது. இரு…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 21

  இந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்திருந்த போது ஆரோவில்லில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நண்பர் அராத்து ஒரு முக்கியமான அவதானிப்பை முன் வைத்தார். நான் அமெரிக்கா பற்றிக் கூறுவதும், மற்றவர்கள் அமெரிக்கா பற்றிக் கூறுவதும் வேறுவேறான தகவல்களாக இருப்பதாகச் சொன்னார். புலம்பெயர்ந்து…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 20

  இனிப்பு எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. திருச்சியில் B G நாயுடு என்றொரு ஸ்வீட் கடை இருக்கிறது. அதில் செய்யும் நெய் மைசூர்பாகு எனக்குப் பிடிக்கும். அதே போல பால்பேடா பூஸ்ட்பேடா போன்ற ஐட்டங்கள் சாப்பிடுவேன். எல்லாம் ஒன்று அல்லது இரண்டு தான்…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 19

  தொடர் பயணங்கள் செய்து கொண்டிருக்கிறேன். பயணங்களில் நான் சந்திக்கும் மனிதர்களும் இடங்களும் என் கதைகளாகின்றன. சமீபத்தில் இரண்டு முறை ட்ரூரோவிலிருக்கும் மணற்குன்றுகளுக்குச் சென்று வந்தேன். சிறு வயதிலிருந்தே மணலின் மீது அதீத காதல் கொண்டவன் நான். புதிதாக வீடு கட்டுபவர்கள் மணலை…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 18

  அப்போது ஒன்றாவது அல்லது இரண்டாவது படித்துக் கொண்டிருந்தேன். திருச்சியில் ஆண்டாள் தெருவில் இடுக்கான மூக்கப்பிள்ளை சந்து என்ற பகுதியில் வசித்து வந்தோம். வீட்டின் சமையலைறைக்கு அந்தப் பக்கம் வீட்டு உரிமையாளரின் மாட்டுக் கொட்டகை. சமையலறையில் சதா மாட்டு சாணத்தின் மணம் வீசிக்…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 17

  ஜூலை 4 சார்ல்ஸ் நதிக்கரையோரம் வழக்கமாக நிகழும் இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். ஜூலை 1 ஆம் தேதிதான் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்திருந்தேன். கடுமையான jetlag இல் இருந்தேன். இருந்தாலும் பாஸ்டன் பாப்ஸ் நிகழ்வுக்கு சென்றுவிட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தேன். 1885-லிருந்து தொடர்ச்சியாக…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 16

  ஊர் சுற்றுவது எனக்குப் பிடிக்கும். பெரிய நகரங்களில் நமது சுயம் தொலைந்துவிடுகிறது. அதுவே பெரிய விடுதலை. புத்தகம், இசைக்கு பிறகு எனக்கு சுற்றுலா மிகவும் பிடிக்கும். பாஸ்டன் வந்த சமயம் கிடைக்கும் விடுமுறைகளில் எங்காவது ஊர் சுற்ற சென்றுவிடுவேன். ஜீப் வந்த…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 15

  சென்னையில் முதன்முதலாக உறவினர்கள் வீட்டைவிட்டு வெளியில் தங்கினேன். இத்தனை வருடங்களில் சென்னையை இவ்வளவு ரசித்ததில்லை. அராத்து அவர்களை முதன்முதலாகச் சந்தித்தேன். அவரைப் பற்றி எனக்கிருந்த அத்தனை பிம்பங்களையும் தகர்த்தெறிந்துவிட்டார். சாரு நிவேதிதா அதிகம் உச்சரித்ததாலே பலருக்கு அராத்தை பிடிக்காமல் போயிருக்கலாம். நானும்…

  மேலும் வாசிக்க
 • அந்நிய நிலக் குறிப்புகள் – வளன் – பகுதி 14

  இரண்டு மாதம் விடுமுறை. அந்நிய நிலத்திலிருந்து சொந்த நிலத்துக்கு வந்துவிட்டேன். வந்ததன் முதற்காரணம்..குடும்பத்தில் தொடர்ந்து மூன்று மரணங்கள். பொதுவாக இப்படி விடுமுறைக்கு வரும் NRI-க்கள் அனைவரும் அனைத்தையும் முகச்சுளிப்புடன் அணுகுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் நியாயம் எனக்குப் புரிகிறது. எதற்கெடுத்தாலும் மேலைநாடுகளை…

  மேலும் வாசிக்க
Back to top button
Close