தமிழ் கவிதைகள்

 • கவிதைகள்

  கவிதைகள்- மஞ்சுளாதேவி 

  கனவு தக்காளியையும் வெங்காயத்தையும் மாற்றி மாற்றிப் பயிரிடும் வியாபாரச் சூதில் எப்போதும் தோற்று நிற்கும் அந்த உழவனுக்கு தன் மூன்று ஏக்கராவில் தென்னை நட்டு தேப்பாக்கி பதறாமக் கொள்ளாம விசுக்கென இருக்கனும் என்றொரு கனவு இருந்தது. வண்ணானுக்கு வாக்கப்பட்டு வெடிய வெடிய…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- நித்யா சதாசிவம் 

  ஆரோகணம் தாண்டவம் என்பது என் மடலின் தீட்சண்யங்களை நீ வெகு தொலைவிலிருந்து பேரன்பாலும் பெருங்கோபத்தாலும் புணர்ந்து புணர்ந்து மலரவைப்பது… நாணம் முகிழ்ந்த ஒப்பனைகளால் மிக நெருங்கிக் குழையும் உனது தாபங்களை தலை கோதி உச்சி முகர்வது அன்பின் பூரணத்தால் மட்டுமே… ஒலியின்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- கார்த்திக் முருகானந்தம் 

  புளியமரத்தின் ஓலம் உடலை இரண்டாய் அறுத்ததால் இரத்தம் வழிவது போலிருக்கும் குங்குமம் அப்பிய அரை எலுமிச்சைகளால் கட்டங்களின் முன் சோழியும் உடுக்கையும் மாறி மாறி தன் குரலை பேயோட்டுபவனின் குரலுக்கிடையே நுழைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது, தலைவிரிக் கோலத்தோடு உறுமிக் கொண்டு தனக்குள்ளிருக்கும்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- க.ரகுநாதன் 

  கவிஞனை காயப்படுத்துவது எப்படி? ஒரு கவிஞனை காயப்படுத்துவது எப்படி என்பது ஒரு எழுத்தாளனைக் காயப்படுத்துவது எப்படி என்பதை அறிவதைப் போல் அவ்வளவு கடினமானது அல்ல. எழுத்தாளனின் படைப்பை வாசிக்கிறீர்கள் அட்டைகளுக்கிடையே பக்கங்களுக்கிடையே பத்திகளுக்கிடையே வரிகளுக்கிடையே எழுத்துகளுக்கிடையே இன்னும் எழுதாத அல்லது வெளுத்த…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்
  Thatchayani

  கவிதைகள்- தாட்சாயணி

  சாபம் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியே அலைகிறது ஒற்றைப்புறா…! கண்களின் கூரிய ஈரம் யாரைக் காயப்படுத்துகிறது என அறிவாயா…? நீயும் நானும் பிரிந்த போது பரிமாறிக் கொண்ட மொத்தத் துயரின் பிம்பமாய் அது தத்தித் தத்தி அலைந்து கொண்டிருக்கிறது! குதூகலித்த காலங்கள் கனவுகளாய்த்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- வளன் 

  நான் துயரத்தின் பெருங்கனவு முடிவுக்கு வருகையில் நானே சகலமுமாக இருக்கிறேன் நான் இருக்கும் இடமே இப்பிரபஞ்சத்தின் ஆதாரப்புள்ளியாக விரிகிறது நான் உச்சரிக்கும் வார்த்தைகள் மந்திரங்களாகின்றன சிந்தும் துளி இரத்தத்தில் சகலமும் ஜெனிக்கிறது மீண்டும் புதிய துவக்கம் மீண்டும் கதகதப்பு சூன்யத்தை நான்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்
  Ambikavarshini

  கவிதைகள்- க.சி.அம்பிகாவர்ஷினி 

  நிழலில் நிற்க விரும்பவில்லை… மரக்கன்றுகளைப் பார்க்க வேண்டும் சுற்றி வளைத்துத்தான் போகவேண்டும் பெயருக்கு ஒன்றாகவாவது மலர்ந்திருப்பதைத் தேடுகிறேன் பெட்டைக் கோழியோன்று வழியில் நிற்கிறது தொட்டியில் படர்ந்திருக்கும் பச்சை மலர்களைக் காணவேண்டும் பெயர் தெரியவில்லை தெரிந்துகொள்ள வேண்டும் பெட்டை வழிவிடவேண்டும் அது எச்சமிடுகிறது……

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- வேல் கண்ணன் 

  தொற்று சிதறல்கள் நித்தியத்துவத்திற்கு முடிவுரை எழுத முற்படுகிறேன் நித்தியத்துவமானது முடிவுரையாகிறது. *** பெருகி வளர்ந்தவைகள் புரண்டு கிடக்க நுண்ணுயிர் போதுமானதாக இருக்கிறது. *** எதிர்பாரா தும்மல் இறையை அழைத்தவர்கள் இப்பொழுது சாத்தானை தன்னுள் அமர்த்திக் கொள்கிறார்கள். *** நேரங்களை ஒரு முறை…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- மதுரா 

  வனமோகினி ஏழுகல் ஆட்டத்தில் கூழாங்கற்களை இணைத்தபடி இளைப்பாறுகிறாள்… நிறமில்லா மலர்வனம் ஒன்றை சிருஷ்டிக்க மறுபடியும் முயற்சிக்கும் கரங்களில் தாழம்பூ மணம்.. புதரோரம் முள்வேலிக்குள் பாம்புகளின் சட்டைகள் .. நீலம் பாரித்த வானத்தின் மின்னல் கீற்றுகளில் விழுங்கித் தொலைக்கிறாள் வண்ணமற்ற சூரிய குஞ்சை.…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- அ.ரோஸ்லின் 

  நனைந்த சுடர் வழி மாறிய குட்டி சிங்கம் ஆதரவற்ற தனது குரலால் காட்டின் நடுவே படபடக்கும் ஒரு சுடரை ஏற்றுகிறது தளர்ந்தாடும் திரியின் ஒளியை தாயின் கண்களாக அடையாளம் கொள்ளும் குட்டி விலங்கு சிற்றோடை அருகில் பூனைக்குட்டியென குளிர்ந்த நீரால் தன்னை…

  மேலும் வாசிக்க
Back to top button
Close