கவிதைகள்

 • கவிதைகள்

  கவிதைகள்- ஜீவன் பென்னி

  இன்னும் தொடங்கிடாத கடலின் கரை 1. கரையில் ஒதுங்கியிருந்த பழைய சங்குகள் மணலுக்குள் ஆழமாக புதைந்து கொள்ள மெனக்கிடுகின்றன வெகு காலம் கழித்துத் தோண்டியெடுக்கும் போது மிக அதிசயமாய் தன்னைக்காண்பிக்க வேண்டுமவற்றிற்கு. அம் மணற்துகள்கள் அக்காலத்தை உருவாக்குவதில் அக்கறை கொள்கின்றன. 2.…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- திருமூ

  1) சியர்ஸ் __________ அவளின் மெல்லிடைபோல் வளைந்து நெளிந்த அக்கண்ணாடித் தம்ளருக்குள் அடர்சிகப்பில் மிளிரும் கருந்திராட்சை ரசத்தினுள் ஒரு இரும்புப் பிடியின் கைக்கொண்டு சின்னஞ்சிறு பனிக்கட்டியை ‘தொபக்’கென்ற சத்தமெழும்படியாய்ப் போடுகிறேன் வர்ண விளக்குகள் விட்டுவிட்டு ஒளிரும் இக்கிளப்பின் பேரோசையில் உதிக்கும் இன்றைய…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- கட்டாரி

  நூற்றியிருபது சதுர அடி அளவிலான அறைக்குள்ளாக கழிப்பறையும் இணைக்கப்பட்டிருக்கிறது. தனித்திருக்கும் போது சிமிண்டுக்கூரைவழிக் காட்சியினூடாக ஜவ்வு மிட்டாய்க்காரர் வழுக்கைத் தலையோடு கலங்கலாகத் தெரிகிறார். ஐம்பது காசுக்கு கடிகாரம் செய்து கையில் ஒட்டிவிடுகிறார். இருபத்திஐந்து காசுக்கு சலித்துக்கொண்டே மோதிரம் மாட்டி விடுகிறார். ஒரு…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- விபீஷணன்

  மனம் சூழ் ஆழி எத்தனை முறை வந்தாலும் முதல்முறை வருபவனைப் போல் என் பாதங்களைக் கழுவுகிறாய் எப்போதும் நீலம் மற்றும் கருப்பு நிற ஆடைகளையே உடுத்திக் கொள்கிறாய் பல உயிர்களை தினமும் பிரசவிக்கிறாய் மனிதனை விடுவிக்கக் கரை வரை ஓடிவந்து நுரைத்துத்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- வருணன்

  #யாருமற்று ஊர்ந்து செல்லும் பின்மதிய தார்ச் சாலை அறிவிக்கிறது அது ஞாயிறென்று வாரம் முழுவதும் நாட்களைத் தொலைத்து வாழ்க்கைக்கு உழைப்பதாய் சொல்லுகிற யாவரும் உலரப் போட்டிருக்கிறார்கள் நைந்த இருதயங்களை படபடக்கும் ஈரத்துணிகளின் இடையிடையே அவர்களால் சோம்பேறிப் பைத்தியமென பெயரிடப்பட்ட அவன் மட்டும்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- கு.அ.தமிழ்மொழி (மொழிபெயர்ப்பு)

  சிந்தி : மகேஷ் நென்வானி ஆங்கிலம் : அருணா ஜெத்வானி தமிழில் : கு.அ.தமிழ்மொழி ************************* ஓவியமும், சிட்டும் – I ஓர் ஓவியத்தை வரைந்து சுவரில் அதைத் தொங்கவிட்டேன் நான் ஒவ்வொரு நாளும் அதனைக் கலையின் ஒவ்வொரு கோணத்தில் உற்று…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- தேவசீமா

  அல்சீமரின் ஞாபக உருக்காலை எழுத நினைத்து மறந்த வரிகள் பெருந்துயருக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடையில் செய்வதறியாமல் கை பிசைகிறது நினைவை அகழ்வதாய் எண்ணி மயிரைப் பிய்த்துக்கொள்கையில் பேன்கள் சிக்குகின்றன நக இடுக்கில் குத்தாமல் முடியுமா இப்போது நகப்பரப்பில் நேனோ துப்பாக்கி சுட்டது போல்…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- ஜீவன் பென்னி

  இன்னும் தொடங்கிடாத காலத்தின் அன்புகள் 1. சிறிய புண்னொன்றின் வலி அதன் காரணத்தையேத் தேடிக்கொண்டிருக்கிறது. சாய்ந்து கொள்வதற்கெனயிருந்த மனமே நெருக்கத்தை உணரவைத்தது. பிறகு மிக மோசமான ஒரு சோகத்தில் கைவிடப்பட்டிருக்கிற தது. சிறிய காரணமொன்றின் வலி அதன் வாழ்வையேத் தேடிக்கொண்டிருக்கிறது. எல்லா…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- ந.பெரியசாமி

  கொரோனா பருவம் நிகழ்வு – 1 நாய்கள் தன்போக்கில் திரிந்தன பொழுது நடுநிசியும் அல்ல தொலைக்காட்சி விளம்பர சப்தங்கள் அளவுக்கு அதிகமாக கண்கள் மட்டும் தெரிய வந்தவள் மாஸ்க் இல்லாத எனை எமனாகக் கண்டு சில அடிகள் தள்ளி நடையை விரைவுபடுத்துகிறாள்.…

  மேலும் வாசிக்க
 • கவிதைகள்

  கவிதைகள்- திருமூ

  1) ஆண்ட பரம்பரை எச்சில்தானே மகனே..! ____________________________________________ அடேய் பீப்பயலே… நாறப்பயலே… எச்சப் பொறுக்கியே… சூர நாய்களேயென… பேருந்தில் நின்றுகொண்டுவந்த எங்களூர் சேரிப்பயனொருவனை பால்ய வயதில் வார்த்தைகளால் கொட்டித்தீர்த்ததை எண்ணிக்கொண்டு காலரைத் தூக்கிவிட்டபடி பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன்; நாங்கள் மண்டையில்…

  மேலும் வாசிக்க
Back to top button
Close