சிறுகதைகள்

பால்

கணேசகுமாரன்

‘‘ நம்மைக் கடந்து செல்லும் பாம்பு என்பது பாம்பாகத்தான் பார்க்கப்படுகிறதே தவிர இது ஆண்பாம்பா பெண்பாம்பா என்றெல்லாம் பார்க்கப்படுவதில்லை. ஆணோ பெண்ணோ எது தீண்டினாலும் மரணம் உறுதி. அதேபோல் ஆணோ பெண்ணோ பாம்புகளில் ரெண்டும் அழகு. பெரும்பாலும் நாம் சினிமாவில் காட்டப்படும் ரப்பர் பாம்பு அல்லது கிராபிக்ஸ் பாம்பைப் பார்த்திருப்போம். அல்லது சர்க்கஸில் பார்வைக்கு வைக்கப்படும் பல் பிடுங்கப்பட்ட பாம்புகளை. அவை அநேகமாக எனக்கு அருவருப்பைத்தான் உண்டு பண்ணியிருக்கின்றன. வயல் வெளிகளில் நீர்க்கரையில் எதேச்சையாக நம் கொல்லைப்புறத்தில் தென்பட்டுவிடும் பாம்புகளை பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு நின்று நிதானித்து ரசித்திருக்கிறாயா…அவ்வளவு அழகு. நம்மைப்போல்’’ அவன் கண்களில் பாம்பின் சிரிப்பு. ‘‘ பாம்பாட்டிகள் சில சமயங்களில் பல் பிடுங்குவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகுடி நிறமும் பாம்பின் நிறமும் பாம்பு உறங்கும் கூடையின் நிறமும் ஒரே மாதிரி இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். மனிதர்களுக்கு ஆணென்ன… பெண்ணென்ன… பாம்பு. அவ்வளவுதான். நம்மைப்போல்’’ பெரிதாகச் சிரித்தான் இவன்.

அவனின் வாயிலிருந்த மதுவைக் கொப்பளித்து இவனின் உதடுகளில் ஒட்டிப் பொருத்தி திறந்த இவனின் வாயினுள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டினான். கண்களை மூடி அவன் வாயிலிருந்து தன் நாக்கில் பட்டு இறங்கும் மதுச் சுவையை ரசித்து விழுங்கிய இவன், தொண்டைக்குள் இறங்கிய அவனின் எச்சிலை மதுவிலிருந்து பிரித்து ரசித்தான். அவனுக்குத் தெரியும் இவனின் எச்சிலின் தனித்தன்மை. அது சற்றே சூடாய், வெகு சொற்பமான தருணங்களில் மட்டுமே நுரையுடன் கூடிய எச்சில் இவன் நாக்கில் படும். பெரும்பாலும் அவனின் உதடுகளுக்குள்ளிருந்து நாக்கின் அடியிலும் பற்களிலும் ஈறுகளிலும் நாக்கிலும் என்று இவன்தான் பிசுபிசுப்பான திரவத்தை சேகரித்து விழுங்குவான்.

 ‘‘ நம்மில் ஆண் யார்? பெண் யார்?’’

‘‘ இது என்ன மிக அபத்தமான கேள்வி.ஆமாம் ஏன் திடீரென்று?’’

 ‘‘ ஒரு கட்டுரையில் படித்தேன். ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருந்து புணர முடியாது என்று. அப்படியென்றால் நம்மில் யார் ஆண்? யார் பெண்?’’

‘‘ சிரிப்புதான் வருகிறது. நம்மில் யாருமே பெண்ணில்லை. நீ எனக்கான ஆண். நான் உனக்கான ஆண்.எப்போதாவது உன் வாசனையை நீ உணர்ந்திருக்கிறாயா?’’

‘‘ ம்…பலமுறை’’

‘‘ அனுபவித்து…?’’

‘‘ யெஸ். மிகவும் பிடிக்கும் எனக்கு. அழுக்கைக்கூட நுகர்ந்திருக்கிறேன். குறிப்பாக…’’

‘‘ போதும்… அதேதான். உன் வாசனை உனக்குப் பிடிக்கிறது. உன்னை நீ ரசிக்கிறாய். என் வாசனை எனக்குப் பிடிக்கிறது. என்னை நான் ரசிக்கிறேன். என்னைப் போலவே வாசனை உள்ள உன்னை நான் ரசிக்கிறேன். உன்னைப் போலவே வாசனை உள்ள என்னை நீ ரசிக்கிறாய். அவ்வளவுதான்.’’

இவனின் கக்கத்து முடிகள் மழிக்கப்பட்டு லேசாக வியர்வை தென்படும் தோலில் அவன் உதடுகள் பொருத்தி சப்பிக் கடிக்கும்போதும் அதே கக்கத்தில் ரோமங்கள் நீக்காமல் வியர்வை காய்ந்து வெளிப்படும் அவனின் அப்பட்டமான மணத்தை ஒளித்து வைத்திருக்கும் அவ்விடத்தில் முகம் புதைத்து நாவால் தீண்டி ஈரப்படுத்தி மீண்டும் மீண்டும் நுகர்ந்து ரோமங்களைப் பற்களால் கடித்து இழுத்து…

‘‘ கடவுள் ஆணைப் படைக்கும்போது அலட்சியமாகவும் பெண்ணைப் படைக்கும்போது அதி சிரத்தையாக கவனமாகவும் படைத்திருப்பானோ?’’

‘‘ ஹா ஹ… உனது சந்தேகத்தைத் தீர்க்கும் வழியில் எனது சந்தேகத்தையும் தீர்த்துக்கொள்கிறேன் எப்போதும். எந்த விதத்தில் பெண்ணைவிட ஆண் தாழ்ந்துவிட்டான்?’’

‘‘ குழந்தை பெற்றுக்கொள்ளும் வழியில்…’’

‘‘ ஷிட்…பெண் தானாகவே பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது தெரியுமா…ஒரு ஆண் வேண்டும் அதற்கும்.’’

‘‘ குழந்தையைத் தாங்கும் சக்தியும் பெற்றுக்கொள்ளும் வலிமையும் பெண்ணுக்குத்தானே தந்திருக்கிறான்.’’

‘‘ இதெல்லாம் பழங்கதை. இன்னும் நீ இதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறாயா…சரி ஆணுக்கு கர்ப்பப்பை தராத கடவுள் எதற்கு மார்பகங்களைத் தந்திருக்கிறான்?’’

‘‘ எதற்கு?’’

‘‘ இதற்குத்தான்’’ என்றபடி அவனுக்கு வலதுபுறம் படுத்திருந்த இவன் ஒரு தாவு தாவி அவனின் மேல் படர்ந்தான். அவனின் இடது மார்பின் மீது தன் மீசையால் லேசாகத் தீண்டினான். தனது நாசியால் மார்பின் மேலும் கீழும் இடதுபுறம் வலதுபுறம் சுவாசித்தவன் மார்புக் காம்பினைத் தனது மேல் கீழ் உதடுகளால் கவ்வி சப்பத் தொடங்கினான்.  குழந்தை பால் குடிப்பதைப் போல் காம்பினை மென்றபடி முழுமையாக அவன் ஒற்றை மார்பை வாயால் சப்பி உறிஞ்சத் தொடங்கினான். அவன் மண்டைக்குள் ஆயிரம் குட்டிப்பாம்புகள் நெளிந்து நெளிந்து நழுவின. இது புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் அவனுக்குள் இப்படித்தான் நிகழ்கிறது. அவனின் மார்புக் காம்பினை மெல்லக் கடித்து இழுத்த இவன் நிமிர்ந்து இரு கைகளையும் இரு புறமும் ஊன்றியபடி அவன் மூக்கின் மீது தன் மூக்கை வைத்தபடி ‘‘ புரியுதா…எதுக்குன்னு?’’ என்றான்.

 ‘‘ என்ன இது… நீயும் தினமும் இதேபோல்தான் செய்கிறாய். இப்படிச் செய்து செய்து என் மார்பே தளர்ந்து போய்விட்டன. எனக்கொன்றும் பெரிதாய் இதில் ஏதும் தெரியவில்லை. நீ காம்பினைச் சப்பும் நேரம் என்னால் தாங்க முடியாத சந்தோசம் உண்டாகிறது. அவ்வளவுதான்.’’

‘‘ அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டாய். உன் மார்புக் காம்பிலிருந்து நான் பால் உறிஞ்சுகிறேன். குடிக்கிறேன். அவ்வளவு சந்தோசம் எனக்கு. பால் குடித்த மயக்கத்தில் சிறு ஏப்பம் விட்டுத் தூங்கி விடுகிறேன். நீயோ இதைத் தாங்க முடியாமல் துடிக்கிறாய். நெளிகிறாய். என் முதுகைக் கீறுகிறாய். இறுதியாய் உறிஞ்சி முடித்து உன் மார்புக் காம்பைக் கடிக்கும்போது ஒரு எம்பு எம்பி என்னைக் கடிக்கிறாய். பின்பு நீயும் களைப்பில் தூங்கிவிடுகிறாய். இவ்வளவு சந்தோசம் கிடைக்கிறதே… போதாதா…சரி. நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எவ்விதத்திலும் உபயோகமற்ற மார்புகளை ஆணுக்குக் கொடுத்ததே இன்னொரு ஆண் அவன் மார்புகளில் உதடுகளால் விளையாடத்தான். பால் ஊறுவதையும் குடிப்பதையும் நான் உணர்கிறேன். உன்னால் உணர முடியவில்லையென்றால் காலப்போக்கில் நீயும் உணர்வாய்’’ அவன் வாயிலிருந்து இவன் வாயை எடுத்துவிட்டு மல்லாந்தான்.

‘‘ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றுவிட்டாய்.’’

‘‘ என்னது?’’

‘‘ பெண் ஆணாய் உணர்வதும் ஆண் பெண்ணாய் உணர்வதும்… அதுதானே இங்கே நடக்கிறது.’’

‘‘ புலம்பாதே. நான் என்னைப்போலவே வாயும் மூக்கும் மார்பும் புட்டமும் குறியும் உள்ள இன்னொருவனுடன்தான் உறவு கொள்கிறேன். இதுபோல் இல்லாத பெண்ணுடன் அல்ல. உணவின் ருசி கனவில் தெரியாது என்பதுபோல்தான் இது. இது வேறு உலகம். வேறு காற்று. வேறு இருள். நீயும் நானும் வாழும் வாழ்க்கை அவ்வளவு எளிதில் எவரும் வாழ முடியாத ஒன்று.’’

‘‘ ஓஹோ… அது எளிதான வாழ்வு இல்லைதான். இங்கே ஆண்பால் உண்டு பெண்பால் உண்டு. இரண்டும் அல்லாத மூன்றாம் பால் உண்டு. நமக்கென்ன பெயர்?’’

‘’ தன்பால் புணர்வாளர்கள்.’’

‘‘ அப்படியென்றால் நீ உன்னையும் நான் என்னையுமா புணர்கிறோம்?’’

‘‘ இல்லையே…’’

‘‘ அப்புறம் எதற்கு அந்தப்பெயர்? தன்னைப்போலவே இருக்கும் இன்னொரு உடலுடன் என்றால் உலகில் நடமாடும் அத்தனை உடல்களுடனா உச்சம் எய்கிறோம். உனக்கு நானும் எனக்கு நீ மட்டுமே வாழும் இவ்வாழ்க்கைக்கு இன்னும் சரியான பெயர் சூட்டப்படவில்லை. இப்படிப் பல ஆண்டுகாலமாக பெயரே இல்லாத ஒன்றுக்காகத்தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். நாம் இதை வெளிச் சொல்வதற்குள் எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது…எத்தனை பெரிய உயர் அந்தஸ்தை அடைய வேண்டியிருக்கிறது…’’

‘‘ புரியவில்லை.’’

‘‘ இப்போது உன்னால் வீதியின் நடுவில் நின்று என் உடம்புடனான தேடல் இவனுடன்தான் என்று உரக்கச் சொல்ல முடியும். ஏனென்றால் நீ அடைந்திருக்கும் உயரம், பெயர், பதவி, பணத்தின் வெளிச்சம் என்பதன் அர்த்தம் வேறு. வெளித்தெரியாத பல கிராமங்களில் பண வசதி இல்லாத சாதாரண கூலி வேலை செய்யும் ஒருவனுக்கு இந்த இச்சை இருக்காதா என்ன…அவன் இன்னொரு ஆணுடன் முத்தம் பகிர மாட்டானா, அவனுக்குத் தன்னைப் போலவே இருக்கும் இன்னொரு ஆணின் புட்டத்தின் சதையாட்டம் மோகம் தூண்டாதா… எங்காவது கேள்விப்பட்டிருக்கிறாயா? ஒரு கிராமத்திலிருந்து மூன்றாம் பாலினத்தவரோ தன்பால் ஈர்ப்பு கொண்டவரோ வெளிவந்து தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்களா? அப்படி வெளிப்பட்டாக வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அந்தக் கிராமத்தை விட்டு வெளிவர வேண்டியிருக்கிறது. சிறு வயதில் நான் கிராமத்தில்தான் வளர்ந்தேன். இப்போது போனாலும் அந்தக் கிராமம் சூரியன் மறைந்த பிறகு காட்டும் நிறம் எனக்கு சற்றே பயம் கூட்டக் கூடியதாய்தான் இருக்கும். என்னவென்றே தெரியாமல் வலிக்க வலிக்க என் பின்புறத்துளையில் இறுகிய ஆண் ஒருவன் தன் வலிமையைச் செலுத்தியது கிராமத்தின் பால்யத்தில். கால மாற்றத்தில் என்ன நடந்தது. இப்போது பார்… உனக்காக நான் ஷேவ் செய்து சுத்தமாக வைத்திருக்கிறேன் ரகசியங்கள் கசியும் ஒரு துளையை. எத்தனை முறை என்றாலும் உனக்காக இறுக்கமாகும் ஒரு சொர்க்கத் துளையை.’’

‘‘ இப்படித்தான் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் படிப்படியாக உனக்கு உள்ளுக்குள் ஊற ஆரம்பித்துவிடும். எனக்கு புட்டத்துளையில் புணர்வது குறித்து பெரிதாய் ஆச்சர்யம் எதுவுமில்லை. வேறு வழியில்லாத வழியில் கண்டடையும் வழிதானே அது. ஆனால், குழந்தையாய் இருக்கும்போது அம்மாவும் அப்பாவும் தொட்டுக் கழுவிய அருவருப்பான இடமமில்லையா அது. ஒரு காலகட்டத்துக்குப் பின் அவரவராலே சரியாய் காண முடியாத மறைந்திருக்கும் ரகசியம் அது. அங்குதான் எவ்வித அருவருப்பும் இல்லாமல் உன் மூச்சு படுகிறது. உன் நாவின் நுனியால் அத்துளைக்குள் எதையோ தேடுகிறாய். வெளிச்சம், இருள், ஏன் இந்த உலகம் அறுந்துபோய் பல் கடித்துக் கிடக்கிறேன். உன் பிசுபிசுப்பான எச்சில் ஈரம் துளை சுற்றிலும் படிந்து வழியும்போது எழும் வாசனை என் நாசியையே எட்டி உலுக்குகிறது. அங்கே கண் விழித்துக் கிடக்கும் உன் நாக்கு இரண்டாய் பிளவுற்று என்னை ரெண்டாய் கிழிக்கிறது. நமக்குள் எந்த அருவருப்பும் இல்லாமல் போனதே நம் காதலை அதிகப்படுத்துகிறது. புனிதப்படுத்துகிறது. ஆனால் இச்சமூகம் இது எதையுமே புரிந்துகொள்ளாமல் நம் உடல் கண்டு முகம் சுளிக்கிறது.’’

அவன் சிரித்தான். ‘‘ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘ நான் சிரிக்கிறதுக்கு ஒரு காரணம் உண்டு. நாம் யார் என்று தெரிந்தபின்புதான் நம்மை இவ்வுலகம் அருவருப்பாய் பார்க்கிறது. தெரியாதவரை நம் அருகில் அமர்ந்து பயணிக்கிறது. தியேட்டரில் பக்கத்து சீட்டில் அமர்ந்து சினிமா பார்க்கிறது. கடவுளுக்கான பிரார்த்தனையில் வரிசையில் நிற்கிறது. இந்த ஜனத்திரளில் நாமும் ஒன்றுதான்…எல்லாம் தெரியும்வரை. தெரிந்தாலும் ஒன்றும் நிகழப்போவதில்லை. சட்டம் சரியென்று சொல்லப்பட்ட எத்தனையோவற்றை இந்த உலகம் விலக்கி வைக்கவில்லையா… அதுபோல்தான். முன்பு ஒருமுறை கேட்டாய் அல்லவா…பாம்பு என்பது பாம்பாய்தான் பார்க்கப்படுமே தவிர ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. அதுபோல்தான். மனிதர்களில் ஆண் பெண் வித்தியாசம் இருந்தாலும் எல்லோருமே பாம்புதான். நிறைய விஷமுள்ள இரட்டை நாவுள்ள பாம்புகள். சிலருக்கு விஷத்தின் நிறமும் மணமும் சுவையும் மிகப் பிடித்திருக்கிறது. இதைப்போல்.’’

தளும்பி நின்று வழிந்த சுக்கிலத்தை நாவினால் நக்கி சுவைத்து உள்ளிழுத்துக்கொண்டவன் அவனின் விறைப்பை முழுவதுமாய் உள் வாங்கினான். சூடாய் பொங்கி வழிந்த உயிர்ப்பிசுபிசுப்பை உறிஞ்சி விழுங்கினான். இவன் ‘‘ போதும் போதும்’’ என்று முனகிய பின்பும் விடாது உறிஞ்சி விழுங்கியவன் ‘‘ உன் மார்பிலிருந்து வரும் பாலுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது’’ என்றான்.

‘‘ கடைசி வரைக்கும் ஒத்துக்கொள்ள மாட்டாய்’’ என்றான் சின்னச் சிரிப்புடன் இவன்.

‘‘ என்னவென்று?’’ என்றபடி தொடை இடுக்கிலிருந்து நிமிர்ந்தான் அச்சதையினை மென்மையாய் கடித்தபடி அவன்.

‘‘ என் மார்பில் பால் என்று ஏதுமில்லையென்று.’’

இவனின் கையை எடுத்து தன் மார்பின் மீது வைத்து அழுத்தியவாறு ‘‘ புரியும். உனக்கும் உன் உலகத்துக்கும் ஒருநாள்’’ என்றான் அவன்.

‘‘ எப்போது?’’

‘‘ நீயோ நானோ அல்லது எதுவுமே இல்லாமல் போகும்போது.’’

அவன் இறந்து பல வருடங்களுக்குப் பிறகான ஒருநாள் நிசியில் தன் மார்பிலிருந்து பெருகி வழிந்து வீதியெங்கும் பெருக்கெடுத்தோடிய பாலின் பிசுபிசுப்பைப் பார்த்தவாறு தன் இரண்டு கைகளாலும் மார்பினை அழுந்தப் பிடித்தபடி அழுதுகொண்டிருந்தவனின் நிர்வாண அழுக்கின் மீது சோடியம் வேபரின் மஞ்சள் தன் நிறத்தை மாற்ற முடியாமல் தவித்தபடி கிடந்தது.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close