கவிதைகள்
Trending

கவிதைகள்- ச.ப்ரியா

ச.ப்ரியா

பதிவிறக்கம் செய்து கொண்ட முகச்செயலியின் மூலம்
தனது முகத்தை மாற்றி அனைவருக்கும் பகிர்கிறான் மாற்றங்கள் எதுவுமின்றி
அவனது முகம்
அப்படியே பிரதிபலிக்கிறது
முதியோர் இல்லத்தில் இருக்கும்
அவனது தந்தையின் முகத்தை.

***** ***** ****** ****** ******

முட்புதரொன்றில் கழுத்தறுபட்டு ஆடைகள் கிழிந்தவாறு
வழிந்து உறைந்த குருதியில்
இறந்து கிடப்பவளைச் சுற்றி
ஈக்களைப் போன்றே மொய்க்கின்றன அவளின் மரணம் குறித்த
வதந்திகளும்.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close