கவிதைகள்

கவிதைகள் -ஜான்ஸி ராணி


1)

ஒளிக்கும் அதன் இன்மைக்கும்
பிறந்ததாயிருக்கின்றன
நம் புரிதல்கள்.
உச்சிக்கும் வீழ்ச்சிக்கும்
உருண்டோடும் பிரியங்கள்.
அடர்காதல் வனங்களை
பதங்கமாக்கி கருக்கும்
க்ஷணநேர பித்துக்கள்.
சிறகணிந்த தேவன் _ வால் முளைத்த சாத்தான்
என
உன் உருண்டோடும் கோலிக்குண்டின்
திரவ லாகவத்தை
வெண்சிறகுகளுதிர்த்து
மண்டையோட்டு மாலை தரித்தே
அணைக்கிறேன் நான்.

 

2)

ஆண் vs பெண்

பெ: என் யானைப் பசிக்கு
சோளப்பொறி உனதன்பு.

ஆ: என் யானைப் பசிக்கு
சோளப்பொறி உன் காமம்.

பெ: காதல் பூவாகி காயாகி
கனிந்து பின் கலவியாகும்
நுண்ணியதெனதுலகில்.

ஆ:நியதிகளற்றது எனதுலகு

பெ: Men are from mars
women are from venus

ஆ: எதிர் துருவமே ஈர்ப்பல்லவா

பெ:என் இரங்கல் எல்லாம் ஈர்ப்பில் உடையும் என் சுயங்களுக்கு.

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close