பதிப்பகம்

கருப்பி

கருப்பி – அருணா ராஜ்

தனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கருப்பி’யின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்துள்ள அருணா ராஜ் இதில் இடம்பெற்றுள்ள ஒன்பது கதைகளின் வழியே சமகால வாழ்வியல் நிதர்சனங்களை வெவ்வேறு கோணங்களில் வெகுஜன வாசகர்கள் தங்களை பொருந்திப் பார்க்கும் வகையில் சித்தரித்துள்ளார். வாசிப்பவர்கள் மிக எளிதாக தங்களது நடைமுறை வாழ்வோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளும்படியான சிறுகதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுப்பு

  1. நித்யா கந்தசாமி

அருணாவோட எழுத்துக்களுக்கு நான் தீவிர ரசிகை… முக்கியமா அவங்களோட நகைச்சுவையுணர்வு… பல நேரங்கள்ல அவங்களோட காரோட்டும் அனுபவங்களைப் படிச்சு, “நாம காரோட்டும்போது அருணா எழுதினதுலாம் நினைவுக்கு வந்து, சிரிச்சுத் தொலைச்சு, நமக்கு ஏதாவது ஆக்சிடண்ட் ஆயிடப்போகுது” ங்கிற அளவுக்குலாம் யோசிச்சதுண்டு… 😀

அருணா எழுதிய சிறுகதை தொகுப்பான “கருப்பி” புத்தகத்தை முதல் பதிப்பின்போது, தபால் ல வாங்காம அவங்களை நேர்ல சந்திச்சுதான் வாங்கணும் ங்கிற முடிவோட இருந்தேன்… ஆனா க க நா கா, நா க க கா கதையா, நான் சென்னை வரப்பலாம் அவங்க வெளிநாட்டுல கார்ல போயிட்டு இருந்ததனால, இரண்டு கருப்பிகளோட, வரலாற்றில் இடம்பெறப் போகின்ற அந்த சந்திப்பு, இன்னும் நிகழலை… 🙁

இந்த புத்தகத்தைப் பத்தி ஆளாளுக்கு விமர்சனம் எழுத, அதையெல்லாம் அவங்க டைம்லைன்ல படிச்சிட்டா, நாம அதைப் படிக்குறப்ப முன்முடிவுகளோட படிக்க வேண்டியதா இருக்கும்ன்னே, அவங்க பக்கத்துக்கு ரொம்ப நாட்களா போகாம இருந்தேன்…

அந்த அளவுக்கு “கருப்பி”யைப் படிக்க ஒரு வித ஆர்வத்தோடவே இருந்தேன். அந்த ஆர்வத்தை அடக்க வேற வழியில்லாம புத்தகத் திருவிழாவில புத்தகத்தை வாங்கியும், ட்ராவல், செட்டிலிங், மாறுவேட காம்படிஷன்னு படிக்க சரியான மூட் அமையாம இருந்தேன்…

நேற்றைய ஒரு பதிவில் அருணாவின் செல்ல மிரட்டலுக்குப் பின், காலைல புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சவ, ஒரே மூச்சில் ஒன்பது சிறுகதைகளையும் படிச்சு முடிச்சுட்டேன்… நிஜம்மாவே ஃபேஸ்புக் வந்த பிறகு இது போல தொடர்ச்சியா வாசிக்கிற பழக்கமே விட்டுப் போன நேரத்துல, “கருப்பி”யை வாசிச்சது, மாய்ஞ்சு மாய்ஞ்சு புத்தகங்கள் படிச்ச கடந்தக் கால நினைவுகளை மீட்டெடுக்க உதவுச்சு…

இந்த தொகுப்புல உள்ள ஒன்பது கதைகளும் பெண்ணின் மெல்லிய உணர்வுகளை ஏதோ ஒரு வகையில் வெளிக்கொண்டு வராப் போல அமைஞ்சிருக்கு…

உறவுச்சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிற இக்காலக்கட்டத்தின் பிரதிபலிப்பா பல கதைகள் அமைஞ்சிருக்கு… சிரிக்கச் சிரிக்க எழுதுற அருணா, பல கதைகளின் முடிவுல ஒரு சின்ன ட்விஸ்ட்டை வச்சு, கதையைப் பத்தி நம்மளை ஆழமா சிந்திக்க வைக்கிறாங்க…

சரளமான எழுத்து நடை, அதிக மேல்பூச்சு இல்லாத யதார்த்த வாழ்வின் பேச்சுக்களால் படிக்குறவங்களே கதையோட ஒன்றிப் போற அளவுக்கு ரொம்ப அழகா எழுதி இருக்காங்க…

இந்த கருப்பிக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு அந்த கருப்பி எழுதிய “கருப்பி”!!

#உங்களோட அடுத்த புத்தகமா கார் ஓட்டிய, கார் ஓட்டுகின்ற உங்களோட அனுபவங்களை எழுதுமாறு இந்த நேரத்துல உங்களைக் கேட்டுக்கிறேன் அருணா!! 😀 😀

  1. LATHA ARUNACHALAM

கருப்பி சிறுகதைத் தொகுப்பை வாசித்து நாளாயிற்று… இப்போது தான் எழுதுகிறேன். சில கதைகளை மீள் வாசிப்பு செய்தேன்.. மறந்ததால் அல்ல. பிடித்துப் போனதால் வாசித்தேன்..அந்த வரிசையில் கிறக்கம், நிம்மதி, டியர் ஆகிய கதைகள் கொஞ்சம் அதிகமாகப் பிடித்தது. அருணா ராஜ் கதைகள் பெரும்பாலும் வெகு ஜன ரசனைக்கு நெருக்கமாக உள்ளது. சம கால வாழ்க்கை முறைகளின் சிக்கல்களையும், இலகுத் தன்மையையும் எளிதான நடையில் , சிக்கனமான வார்த்தைப் பிரயோகங்களில் சொல்லிச் செல்கிறார்.
பல கதைகளில் கணவன் மனைவி உறவை , அவர்கள் தொலைத்துக் கொண்டே இருக்கும் நெருக்கத்தை, அதனால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பிறழ்வுகள் என்று பல கோணங்களில் அதிராத வார்த்தைகளால் விவரித்து இருக்கிறார்.

நிம்மதி என்னும் கதையில், தம்பதிகளின் புரிதலில் தொடங்கி, பின் சிறிய மன சுணக்கம், இறுதியில் எதிர்பாராமல் அது எவ்விதம் சுமுகமாக முடிகிறது என்பது ஆச்சர்யமான திருப்பம். இருவருக்கும் ஒரு ரகசியம், அதன் ஒற்றுமை,அதை வெளிப்படுத்திய பின் ஏற்படும் நிம்மதி..வாசிபவர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கிறார்.சைக்கியாட்ரிஸ்ட் என்ற பெயரில் ஒரே ஒரு கதை இருந்தாலும் பல கதைகளில் மனச் சிதைவைப் பற்றி பேசப்படுகிறது. எப்போதும் குடும்ப அமைப்புக்குள் இருந்தே பெரும்பாலான கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்பின் மறுபக்கத்தை , அந்த அமைப்புக்குள் இருப்பதாலேயே சிக்கல் வராது என்னும் பிம்பத்தை சில இடங்களில் கட்டுடைக்கிறார்.

எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் சில அழகான, குறு குறுப்பான தருணங்களைத் திருடி சவைத்துக் கொள்வதை அழகியலில் சார்ந்ததாகவே நான் நினைக்கிறேன். Flirting என்பதை அந்த மனநிலை ரசனையுடன் கையாண்டுள்ளார் காஃபி என்னும் கதையில். எனவே அது சுவையாகவே இருந்தது.

செகண்ட் ஷோ என்னும் கதை இல்லற , திருமணஅறம் சார்ந்த நிலைப் பாட்டை எடுக்கிறது.. ஆனால் , தனி மனித உணர்வுகள் முக்கியத்துவம் பெற்று , உறவுகளின் பரிமாணம் மாறிக் கொண்டு இருக்கும் சம கால சூழலில் அந்தக் கதை கொஞ்சம் காலத்தோடு ஒட்டாமல் உள்ளது.
கருப்பி , புத்தகத் தலைப்புக் கதை.. ஒரு பதின் பருவ மாணவனின் , அவன் வயதுப் பெண்ணின் மீதான ஈர்ப்பில் தொடங்கிப் பயணிக்கும் கதை சட்டென்று மடை மாறி, பெண் மொழியில் பேசுகிறது. வயதின் ஈர்ப்பைக் கையாள்வதில் பெண்ணின் சமயோசிதமும், ஆணின் வலிமையற்ற நிலைப்பாட்டையும் சற்று எள்ளலுடன் சொல்லும் கதை இது..
குடிப் பழக்கம், விளிம்பு நிலை வாழ்க்கை, கிராமச் சூழ்நிலை, கார்ப்பரேட் சூழல் ,என்று பல தரப்பட்ட களங்களை எடுத்தாண்டுள்ளார் அருணா.
மொழியும் பொது வழக்கின் சொல்லாடலில் அமைந்து இருக்கிறது .

கதைகளின் நீளம் அளவாகவும் உரையாடல் பாணி அதிகமாக இருப்பதும் , மேலும் அதிகம் சிக்கல்கள் அற்ற முடிச்சுகள் கொண்ட கதைக் கருவும் , சொல்லப் பட்ட விதமும் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

ஒரு feel good reading experience என்றால் கருப்பி நல்ல தேர்வு. வாழ்த்துகள் அருணா.

  1. SUBRAMANIAN NARAYANAN

இந்த வருடத்திய புத்தக சந்தையில் வாங்கிய புத்தகம் அருணா ராஜ் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான கருப்பி! கருப்புதான் எனக்கு பிடித்த நிறம் (நெசம்மா! அலுவலகத்தில் விற்க வந்தவரிடம் எனக்கு பிடித்து வாங்கியது கருப்பு புடவை!;எங்கள் சிவகாசியில் கருப்பு taboo!)
படித்து முடித்தபின் எனக்கு தோன்றியதை இங்கு கொடுத்துள்ளேன்!

காஃபியும்,இருளும்
. இந்த இரண்டும் தனித் தன்மை கொண்டுள்ள ஒன்று. மற்றவை மனித மனங்களின் ஊசலால் வரும் விளைவுகள்!மற்ற கதைகளை படித்தபின் அருணா பல் மருத்துவரா இல்லை psychiatristஆ என்ற சந்தேகம் வருவது இயற்கை.முதல் புத்தக பதிப்பு என்பது முதல் குழந்தைப்பேறு போன்றது! நிறைய தவிப்பும், கஷ்டமும் கொண்ட ஒன்று.சுகப் பிரசவம் அருணா!
வாழ்த்துக்கள்

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close