சிறார் இலக்கியம்
Trending

கடைக்குட்டி எறும்பு!

கன்னிக்கோவில் இராஜா

பன்னீர்மரக் காட்டில் உள்ள சரக்கொன்றை மரத்தின் கீழ்தான் அந்த எறும்பு குடும்பம் வசித்த வந்தன.

காலையில் எழுந்த சுறுசுறுப்பாக உணவை சேகரிப்பதுதான் அவைகளின் பொழுதுபோக்கு, கடமை எல்லாமே..

அந்த எறும்புக் குடும்பமே உழைப்பதைக் கண்டு பொறாமை கொண்டன அருகில் வசித்த கொசுக் குடும்பம்.

என்ன இது! எப்போதுமே இந்த எறும்புகள் உழைத்துக் கொண்டே இருக்கிறதே…” என நொந்து கொண்டன கொசுக்கள்.

ஒருநாள் காலை உணவைத்தேடி குடும்பத்தில் உள்ள அத்தனை எறும்புகளும் புறப்பட்டன. அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கொசுக்கூட்டம் அவைகள் சென்று விட்டன என்பதை உறுதி செய்து கொண்டு, எறும்பு புற்றுக்குள் நுழைந்து அங்கு சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை காலி செய்தன. வெளியே பறந்து வரும்போது, கூட்டமாக வந்ததால் அவைகளின் பளுவை தாங்க முடியாமல் எறும்பு புற்று இடிந்து தரை மட்டமானது.

ஐயையோ! புற்று இடிந்து விட்டதே என வருத்தப்பட்டது பறந்து வந்த ஒரு கொசு.

இடிந்தால் இடிந்துவிட்டுப் போகட்டும் நமக்கென்ன..” என்று கூறியபடியே பறந்த மற்ற கொசுக்கள்.

எறும்புக்கூட்டம் தாங்கள் சேகரித்த பொருட்களை சுமந்து கொண்டு சரக்கொன்றை மரத்தின் அருகே வந்தன. அங்கே புற்றை காணவில்லை.

என்ன இது! இந்த சரக்கொன்றை மரத்தின் கீழேதான நமது புற்று இருந்தது. அது இப்போ என்ன ஆனது என கேள்வி எழுப்பியது குடும்பத் தலைவன் எறும்பு.

ஆமாம்! எனக்கும் நன்றாக அடையாளம் இருக்கிறது. இந்த மரத்தின் வேர்களில் தானே நான் சறுக்குமரம் விளையாடுவேன். வேர் இருக்கிறது.. நம் புற்றைக் காணவில்லையே என்று வருத்தம் தெரிவித்தது கடைக்குட்டி எறும்பு.

சுற்றும் முற்றும் பார்த்தன எங்கேயும் புற்று இருப்பதற்கான அடையாளம் கூட தெரியவில்லை.

என்ன செய்வது? என யோசைன செய்தது எறும்புக் குடும்பத் தலைவன்ங.

நாம் அந்தக் கொசுக்களிடம் உதவிக் கேட்கலாமா? என தனது யோசனையைச் சொன்னது மனைவி எறும்பு.

சரி கேட்போம்! என அனைத்து எறும்புகளும் கொசுக்கள் இருந்த இடத்திற்கு வந்தன.

கொசுக்களே! எங்கள் புற்று இங்கேதான் இருந்தது. அதனைக் காணவில்லை. எங்களுக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு எதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டது தலைவன் எறும்பு.

உங்க புற்றைக் காணவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வதுஎங்களுக்கு புற்று எல்லாம் கிடையாது. பழைய பொருட்கள், தேங்கிய நீர்தான் எங்களின் வீடுநாங்கள் உங்களுக்கு என்ன உதவி செய்வது. போங்கபோங்க…” என கோபமாக சொன்னது கொசு.

அப்பாஉதவிக் கேட்டும் கிடைக்காமல் போனால், நம் தன்னம்பிக்கையைத்தான் மூலதனம் ஆக்கணும் என நீங்கதானே அடிக்கடி சொல்வீங்க. வாங்கப்பா நாம நம்ம தன்னம்பிக்கையை கொண்டு செயல்படலாம் என்றது கடைக்குட்டி எறும்பு.

போங்கபோங்கஅதான் உங்க குட்டி எறும்பு சொல்லிடுச்சே. போய் தன்னம்பிக்கையா செயல்படுங்க என கிண்டல் செய்தன எறும்புகள்.

எறும்புகள் மெதுவாக நடக்கத் தொடங்கின. அப்போது சிறு தூறல் தூற ஆரம்பித்தது.

அடடா! நல்ல மழை வரும்போல இருக்கு. நாம உடனடியா பாதுகாப்பான இடத்துக்கு போகணும்சரி. சரி. எல்லாம் வேகமா வாங்க என அழைத்தது தலைவன் எறும்பு.

பாதுகாப்பாக தங்குவதற்கு இடத்தை தேடியதில் எதுவுமே கிடைக்கவில்லை. மழைவேறு பிசுபிசுவென பெய்து கொண்டிருந்தது.

சரி. இந்த மரப்பட்டைக்கு அடியில் தங்கலாம் எதாவது ஒரு வழி கிடைக்கும் என்று சொல்லியபடி மரப்பட்டைக்கு கீழே சென்றன.

கொஞ்ச நேரத்தில் மழை அதிகமாக பெய்தது. அந்த மழைநீரில் மரப்பட்டை மூழ்கும் நிலைக்கு வந்தது.

ஐயையோஇந்த தற்காலிக வீடும் நீரில் மூழ்கி விடும் போல இருக்கே என குரல் கொடுத்தது அம்மா எறும்பு.

எல்லோரும் அந்த மரப்பட்டையின் மேலே ஏறி கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நாம் அதிலேயே பயணிக்கலாம் என்றது அப்பா எறும்பு.

எல்லா எறும்புகளும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.

மழைவிட்டது. ஆனாலும் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. மரப்பட்டையும் மெல்ல மெல்ல நகர்ந்தது. அந்தப் பயணம் எறும்புகளுக்கு, ஒரு சிறு படகில் பயணிப்பது போன்று இருந்தது.

அந்த மரப்பட்டை படகு பல இடங்களில் முட்டி மோதி பயணித்தது. ஒவ்வொரு முறையும் பெரும் தன்னம்பிக்கையோடு பயணத்தை தொடர்ந்தன எறும்புகள். கடைசியாக ஒரு பெரிய மரத்தின் வேரில் நுழைந்து அதற்கு மேல் பயணிக்க முடியாமல் நின்றது அந்த மரப்பட்டை. அந்த மரத்தின் ஒரு பகுதி மழை நீரிலும், மறு பகுதி சமவெளியிலும் இருந்தது. சமவெளியைப் பார்த்த எறும்புகள் அவசர அவசரமாக இறங்கி சமவெளியை நோக்கி நடந்தன.

அப்பா! நாம் மழையை எதிர்த்து சமவெளிக்கு வந்துவிட்டோம்நமது தன்னம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்லிவிட்டு நடனமாடியது கடைக்குட்டி எறும்பு.

கடைக்குட்டி எறும்பின் நடனத்தை ரசித்தபடி, தங்களுக்கான புற்றை உருவாக்க தயாராகின மற்ற எறும்புகள்.

***

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close