பதிப்பகம்

சொக்கட்டான் தேசம்

  1. அர்ச்சனா

பல்வேறு காலங்களில் முகநூலில் பதியப்பட்ட 39 சின்னஞ்சிறு கட்டுரைகளின் தொகுப்பு.

Rajasangeethan John எழுத்தாளரின் எழுத்து நடை..தனக்கே உரித்தான வித்தியாசமான கண்ணோட்டமுமே பெருதும் ஈர்க்கிறது

திரு.ப.திருமாவேலன்..
நம் மனதில் படித்தவுடன் படுவதை அப்படியே கொடுத்துள்ளார் முன்னுரையாக..

அந்த ஆறு நாட்கள்..

மெரினாவை போராட்டகளமாக கண்ட காட்சி மீண்டும் நம் கண் முன்னே இருந்தவை இருந்தவையாகவே படமெடுத்தார் போல் காட்டும் எழுத்தின் அருமை..”பேதங்கள் ஏதும் இல்லாத,அறிவு சார்ந்த அழகு சமூகத்தின் ஆறு நாட்கள்..”

கல்தோன்றி மண்தோண்றா காலத்தே..

ஆதி மனிதன் தமிழன் என்பதையும் தமிழனே ஆட்சியும் புரிபவனாவான் என்பதையும் சீமான் முன்மொழிந்த தமிழ்நாடு தமிழனுக்கு என்னும் கோஷத்தையும்..70000 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஆதிமனிதனோட மரபணு தொடர்ச்சி இப்பவும் மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள் ஒரு கிரமாத்தில இருக்கிற ஒருத்தர் மரபணுவில் இருக்குன்னு ஸ்பென்சர் வெல்ஸ் தலைமையிலான Geographic Project கண்டறிந்துள்ளதுன்னு நுணுக்கமா சொல்லறதும் அழகு…

வீரமண்டைகள்..

எத்தனை போராட்டங்கள் எத்தனை எத்தனை மண்டை உடைப்புகள்..
“உடைக்கப்பட்ட மண்டைகளில் அவர்கள் மண்கள் தான் அதிகம் இருக்கும்”
“அந்த மண்டைகள் உடைபடுவது நமக்காக தான்.அந்த மார்பகங்கள் கசக்கப்படுவது நம் பெண்களின் மார்பகங்களைக் காப்பாற்ற தான்” “அவர்கள் கம்யூனிஸ்டுகள்”

அனைத்தும் உண்மையான வரிகளாகவேபட்டது மனதில்..

புதியபறவை…

ஜெயலலிதா மரணமும்.. அவரது செயல்கள் சசிகலாவின் நிலை.. பன்னீர்செல்வம் மற்றும் ஸ்டாலின் இவர்களுடன் நம் மத்திய அரசு பா ஜக வையும் நம் சிவாஜி வசனத்தில் உள்ளடக்கிவிட்டார்.. ஹஹா “என்ன அருமையான நாடகம், எவ்வளவு அருமையான அலங்காரம்,எத்தனை அழகான நடிப்பு”

தமிழ்நாட்டு அரசியல்…

பீரோவும் கட்டுமரமும் என ஆரம்பித்து… வழக்கமான எழுத்தின் நடையில் ஈர்த்துவிட்டார்.. கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த திமுக கம்யூனிஸ்ட் மோதலை..

அவள் அப்படிதான்…

ஆணாதிக்கவாதிகளைச் சுலபமாக கையாளும் பெண்ணியவாதி பெண்,ஒரு பெண்ணியவாதி ஆணை எப்படி அணுகிறாள்?ஆணாதிக்கத்தை மறுக்கும் பெண்ணியவாதி ஆண்,ஒரு பெண்ணியவாதி பெண்ணை எப்படி அணுகுகிறான்? இப்படிப்பட்ட முடிச்சில் தான் விளையாடிருப்பார் ருத்ரய்யா என ஆரம்பித்து “அவள் அப்படிதான்” படத்தை பார்த்த திருப்பியை கொடுத்துள்ளார் ராஜசங்கீதன் அவருக்கே உரித்தான எழுத்தின் நடையில்..

எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள்..

“காதல் தேசம்” படத்தை தான் இதில் மிக மிக வித்தியாசமான கோணத்தில் கண்முன் விரிக்கிறார்.. ஆம்! அந்த தேசத்தில் என்னவெல்லாம் இல்லாமல் இருக்கிறது…அதாவது காட்டப்படாத விஷயங்கள்…கார்கள் இருக்கும் அந்த கார்களுக்கு பெட்ரோலும் இருக்கும் ஆனால் பெட்ரோல் பங்குகள் காட்டப்படவில்லை எனினும் எங்கோ இருக்க வேண்டும் அந்த தேசத்தில்…இந்த கோணத்தில் நாம் படத்தை பார்த்ததில்லையே என ஒரு நிமிடம் நிச்சயம் யோசிப்போம். மறக்க வேண்டியவைகள்..

மறக்காமல் நினைவில் தங்கி விடுவது…யார் விட்ட சாபமோ..
துக்கத்திலும் துணை நிற்க நானே துணிந்து நிற்கும் வேண்டும்…”காருக்குள் இருந்து தலைகளை வெளியே நாட்டு உதட்டு முத்தம் கொடுத்துக் கொள்வார்கள்.அந்த தேசத்தில் அது காதல் பரிவர்த்தனையாக கூட இருக்கலாம்”

அந்த தேசத்தின் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள் சிரம்ப்பட்டுக் காதலித்து அந்த மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள்.அனைவரும் உதட்டு முத்தம் கொடுக்கப் பழகிக் கொள்வோம்.நமக்கும் தேச நலன் முக்கியம் ஏனெனில் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள்…

கேள்விகள் மட்டுமே பதில்கள்..

தில்லியில் அம்மணமாக நின்றது விவசாயி மட்டுமா? என்பதில் ஆரம்பித்த கேள்வி தொடருகிறது..அனைத்தும் கேள்விகள் நமக்குள் நாமே கூட பல நேரங்களில. கேட்டுக் கொண்டவை தான்.இதற்கான பதிலும் நமக்கு தெரியும்…

இனி ஒவ்வொரு தெருவிலும் பற்பல அம்மணக் கூட்டங்கள் நிற்கும் என தலைகுனிய செய்யும் ஒரு முடிவுடன் முற்றுபுள்ளி வைத்திட்டார் எழுத்தாளர்..

கொல்லப்பட்டது உண்மையில் எது?..

கோயம்புத்தூரில் நடந்த ஃபாரூக் கொலை இதை வைத்து தான் கட்டுரை…இதில் எத்தனை அழகாய் இந்திய அரசியலும்…இஸ்லாமிய வெறுப்பின் பின்னனி என்ன? எதற்காக வெறுப்பு வரும்படி செய்தார்கள்? யார் செய்தார்கள்?

ஜெயமோகன் அவர்களையும் விட்டு வைக்கவில்லை விளாசித்தள்ளியுள்ளார். “இவர்களை மீண்டும் அதே வாய்களைக் கொண்டு அவர்களையும் திட்டுவோம் ஒரு சேர.ஏனென்றால் கொல்பவனை விடக் கொல்ல தூண்டுபவன் தான் பெரும் குற்றவாளி” நாமக்குள்ளும் சிந்தனை உண்டு ஏன் பொதுவாக இஸ்லாமியத்தின் மேல் வெறுப்பின் சாயத்தை அப்புகின்றனர் என்று.. இஸ்லாமிய நண்பர்கள் நமக்கும் உண்டல்லவா…

மணிரத்னத்தின் கல்யாணங்கள்…

படிக்கும் பொழுது நிச்சயம் சிரிப்பும். ஒவ்வொரு படத்தின் வித்தியாசமான கல்யாணங்களும் யோசிக்க வைக்காமல் இல்லை..மணி அவர்களின் படங்களின் வரிசைகளில் இவரது கண்ணோட்டத்தில் நம்மையும் அங்கு கூட்டி சென்று விட்டார். “கட்டம்,பொருத்தம்,சாதி,மதம்,திட்டம் எல்லாம் பார்க்காமல் சொதப்பலாக்க் கல்யாணம் செய்யுங்கள்.வாழ்க்கை சிறப்பாக இருக்கும்”

அட என்னதொரு உண்மை என்று இதை படித்து சொல்லாமல் இருந்தால் தான் தவறு..

திருமா என்னும் நிகழா அற்புதம்…

“ரஜனிகாந்தை அரசியல் தலைமைக்கு முன்னிறுத்துகிறார் திருமா.அவர் அந்த தலைமை எடுக்கலாமே என்ற கேள்விக்கு அந்த நிலை அடைவதற்கான வாய்ப்புத் தங்களுக்கு கிடையாது என்கிறார்.” எத்தனையோ போரங்களிலும் நிறைய பேரின் கனவுகளுக்கு நம்பிக்கையாய் இருந்தவர்.சமூகம் சாதியை ஏற்காது என்றதொரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையும் இந்த அரசியலில் கண்ணுக்கு தென்படாமல் நடக்கும் பலவற்றை அழகாக விவரிக்கிறார்.இறுதியாக எழுத்தாளனின் குரலாக இயக்குநர் ரஞ்சித் சொன்னதையே ஒலிக்க விடுகிறார்”அம்பேத்கர் இனி உயர்சாதியில் பிறக்க வேண்டும்.நீலமும் சிவப்பும் ஒன்றாக வேண்டும்”

எது ஆரியம்?…

Django Unchained இந்த படத்தை நம்மூரில் நடக்கும் தலித்தகள் மீதான ஒடுக்குமுறையை ஒப்பிட்டு வெகு சாமர்த்தியமாக நம் நாட்டுக்குள் நடப்பவற்றை உள்ளே புகுந்து வெளியே வந்து அசத்திவிட்டார்.

உங்களின் கோவணங்கள்…

மீண்டும் கம்யூனிஸ்ட்களை பற்றிய கட்டுரையே ஆனால் இதுலயும் வேறு ஒரு கோணம்.” உங்கள் அம்மணத்தை எங்கள் கோவணங்கள் கொண்டு மறைத்து உங்கள் மானத்தைக் காப்பாற்றுகிறோம்.இதற்கு நன்றிகள் வேண்டாம்.ஏனெனில் நன்றிகள் எதிர்பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல”
” we are not like you.we know what we are!

விர்ச்சுவல் பொருளாதாரமும் உடைந்த சத்தியங்களும்…

“விர்ச்சிவல் ரியாலிட்டியில் பார்ப்பதே ஒரு விர்ச்சுவல் ரியாலிட்டி தான் எனப் பெரும் அதிர்ச்சியை கொடுத்த படம் ஒன்று வந்திருக்கிறது” Matrix இந்த படத்தையும் இங்கு நடக்கும் நிகழ்கால விஷயங்களையும் இப்படி எல்லாம் ஒன்று சேர்த்து பார்க்க முடியுமா என்று நம் மேல் சந்தேகம் எழுகிறது.

அவர்கள்…

ஜல்லிகட்டில் ஒன்றிணைந்த இளைஞர்களை பற்றி…. முழுக்க முழுக்க அவர்களை பற்றி…

பன்றிகள்…

Fandry என்ற ஒரு மராத்தி படத்தின் கட்டுரை. இதை சொல்வதை விட படிக்கும் பொழுது தான் கதையின் அருமை விளங்கும்.

வரம்…

மன்னிப்பு வேண்டலின் முக்கியதுவமும் அதை எப்படி கேட்பது சரியென்றும்..ஏன் கேட்க வேண்டும் என்றும் மிக தெளிவான பதிவு.

மந்திரசாவி..

விஞ்ஞானம் நம் வாழ்வை சிக்கலாக்கிவிட்டதாக யோசிக்க வைத்துள்ளார் உண்மை தான் நாம் மொபைல் சார்ஜ் ஏற்றுவதை தான் முதலில் யோசிக்கிறாம் பயணத்தின் ஆரம்பத்தில். வீட்டை வாடைக்கு பார்க்கும் பொழுது நாம் ஆராய்வது பளக் பாய்ண்ட்..நானள அதற்காக plug extension வாங்கி வைத்துள்ளேன். கண் ஒரு நிமிடம் அதை பார்க்க தான் செய்தது.

குற்றம் கடிதல்…

சின்னஞ்சிறு வயதில் பண்ணையில் வேலை செய்தவர் செருப்பு வாங்கி தர கேட்டு..வாங்கி தராமல் போனதையும்.அவரை தானும் வேலைக்காரன் முதலாளி என்ற கண்ணோட்டதில் இறுதியில் வேதனை பட்டு அவரிடம் மன்னிப்பு கேட்க அவரை வர சொல்லி வராத அவரின் தன்மானத்தை கண்டு பெருமை கொண்டதை சிலாகித்துள்ளார்.ஆனால் எனக்கு ஒரு கேள்வி உண்டு… மன்னிப்பு கேட்க நினைத்தவர் நேரில் அல்லவா சென்றிருக்க வேண்டும்.வர சொன்னதில் இன்னமும் நாம் முதலாளி என்ற கர்வம் எங்கோ மறைந்துள்ளதாகவே பட்டது.

கடவுளின் பெயரால்…

கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு இங்கு நடக்கும் பலதரப்பட்ட சகித்து கொள்ள முடியா விஷயங்களில் கொதித்துக்கொண்டிருக்கும் சராசரி மனிதனாக ..நம்மில் ஒருவனாக எழுத்தாளன் நிற்கிறார்.

பெண்கள் காலம்…

பெண்களை உயர்த்தி பிடிப்பதாய் கார்ப்பரெட்டுகளின் கூவல்களை மைக் இல்லாமல் கத்துகிறார்.இது பெண்ணியம் அல்ல.இது முதலாளித்துவம் என்று…

என்ன சொல்லி என்ன ஆக போகிறது.பெண்களின் பலவீனமும் அதுவே.

ஜல்லிக்கட்டு..

ஏறு தழுவுதலில் இருந்து சல்லிக்கட்டு ஆகி இப்ப ஜல்லிக்கடான கதையில இருந்து அதில் இருக்கிற அரசியல்,மாடுகளை பற்றி,வீரத்தை பற்றி,அதில் கலந்துள்ள சாதி வெறிகளை பற்றி பார்வையில் எந்த பிழையும் இல்லா வரிகள்.

கம்பீரமானவன்…

இதோ மீண்டும் கம்யூனிஸ்ட் எதற்காகவும் யாருக்காகவும் பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தி முன் நிற்பவர்கள் ” அவனை வீழ்த்த வேண்டுமெனில் ஒரே வழி தான்.அவனை கொல்வது.” இப்படியாக முடிக்கும் பொழுது கம்பீரமான பலரது தோற்றங்கள் வந்து செல்கின்றன.

கமல் ஆளுமை…

தனது பிம்பத்தை சரியாக மக்களிடம் கொண்டு வந்தவர்.காதலில் ஆரம்பித்தவர் காலத்துக்கேற்றாற் போல் தன் பிம்பங்களையும் மக்களின் உணர்ச்சிகளுக்கு வசனங்களையும் தெறிக்க விட்டவர் கமல்.அவலை பற்றியே இக்கட்டுரை முழுமையாக அமைந்துள்ளது.

காவல்துறைக்கு சில யோசனைகள்…

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் மீனவர் குப்பத்தில் காவல்துறையினர் கட்டவீழ்த்த அராஜகத்தை முன்னிட்டு காவல் துறைக்கு பல யோசனைகளை வழங்கியுள்ளர்.அபாரம் இது மிகவும் அவர்களுக்கு பயன் தரும் ஹஹா.

கோணங்கள்…

நம் கண்களின் காட்சி கோணங்கள் வேறு மாதிரியாகிவிட்டது..எப்படி எதஐயெல்லாம் ரசித்திட வேண்டும் என்பதை உதாரணமாக ரயிலுக்கு காத்திருந்து தாமதமானால் என வைத்து காரணமில்லாமல் நமது டென்ஷனால் எதை எல்லாம் ரசிக்காமல் விட்டுவிடுவோம் என்பதை அருமையாககாட்சிபடுத்திவிட்டார்.

ரத்னம் தேய்ந்து வெறும் மணி ஆன கதை…

இவரது படங்கள் பெரும்பாலும் அந்தந்த காலகட்டங்களில் ஏற்படும் சமூக பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டே இருக்கும் ஆனால் அது நடுநிலையாக இருக்கும் யார் பக்கமும் சரி தவறு என்றோ அல்லது தீர்வோ இருக்காது.லாப நோக்கில் மட்டுமே வெளிவரும் படங்கள்.இந்தியையே ஆதரிக்கிறார் என்பதை எழுத்தாளர் நேருக்கு நேர் கேட்பதை போலவே கேட்டு விட்டார்…

தொழில் நுட்பன்..

Digitally naked இந்த ஒரு வீர்த்தையை வைத்துக் கொண்டு மனுஷன் எங்கெங்கோ சுட்டிகாட்டிட்டார்.உண்மைதான் ஒரு பந்தய குதிரைக்கு நெம்பர் போடற மாதிரி நமக்கும் நெம்பர் போட்டாச்சு ஆதார்ன்னு,குதிரையோட கடிவாளம் குதிரைட்ட இல்லையே அத ஆளவரவன்ட்ட இல்ல இருக்கு இதையே தான் ராஜசங்கீதனும் திரம்பட சுட்டிகாட்டியிருக்கார் ஆனா என்னத்த பண்ண முடியும்..

கறுப்பு..

தருண் விஜய் கறுப்ப பத்தி சொன்னத வச்சு தான் கட்டுரை..அவர் சொல்லுவதிலும் தவறில்லை ஒரு வெள்ளையனோ வேறு நாட்டவனோ கறுப்பு என்று நம்மை ஒதுக்குகிறான்.நாம் நம் நாட்டுக்குள்ளேயே அதை பார்க்கிறோமே.அவன் நம்மை சொல்லுவது தவறென்றால் இங்கு நால் சிலரை அழுக்கானவர்கள் தொட்டால் தீட்டு என்று ஒதுங்குதவதிலும் தவறுள்ளதே அதே தான் வெறுப்பிப் உச்சகட்ட சலித்துல்போன வார்த்தைகளால் கோர்த்துள்ளார்.

கட்டுக்கதைகள்..

Shared imagination என்ற வார்த்தையை கொண்டே கருத்து பறிமாறபடுகிறது..இதை கூட்டுக் கற்பனை என மொழி பெயர்த்து அதனடிப்படையில் “இழிவான கூட்டுக் கற்பனைகளிடம் அதிகாரத்தைக் கொடுத்து ஆட்டம் போட வைத்திருக்கிறோம்.அவற்றிலிருந்து தப்பிக்க ஒரு கூட்டுக் கற்பனை அவசர அவசியம்.” இதற்கு தான் சின்னஞ்சிறு எடுத்துக்காட்டிகளோடு பகிர்த்துள்ளார்.

செல்வராகவன்…

இவரின் படங்களில் பலதை பெருமைபட சொல்லியும் பிடிக்காத்தை தனக்கு பிடிக்கவில்லையென காரணம் சொல்லியும் கொண்டு சென்றுள்ளார்.

ஒரு புரிதலுக்காக..

விவாகரத்து எத்தனை மனவலிகளை கடந்து வலிகளுடனே வாழ்ந்தும் இருப்பவர்களை சற்றேனும் புரிந்து கொள்ள வேண்டியே இதில் முழுக்க அடங்கியுள்ளது..

“இணைதல் எவ்வளவு இயல்போ பிரிதலும் அத்தனை இயல்பு எனப் புரிவோம்”.

கெட்டவார்த்தைகள்..

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறிவுமதி அய்ய அவர்களை கடந்த ஒரு குழு கோஷங்களாக கெட்ட வார்த்தைகளை எழுப்பினர் என்பதைக் கொண்டு எழுத்தாளருக்கும் அறிவுமதி அய்ய அவர்களும் கலந்துரையாடியதில் முக்கியமான வரிகளை மட்டும் இங்கு சிந்தியுள்ளார்..
நிராயுதபாணியாக நிற்கும் தருணத்தில் வாய் மட்டுமே ஆயுதமாக நினைத்து பிரயோகிப்பதே கெட்டவார்தைகள்..இதையே இன்னும் கொஞ்சம் புரியும்படி விளக்கமாக கட்டவிழ்த்து உள்ளார்.

பிராண்டுகள்..

பொதுவாகவே இப்போதைய காலகட்டத்தில் செருப்பிலிருந்து கொண்டையூசி வரை நமக்கு தேவைபடுவது பிராண்ட். முழுக்க முழுக்க கார்ப்பரெட்டுகளின் உத்தி அனைத்தும் தெரிந்தும் பிராண்ட் என்று தான் பின் செல்வோம் அப்படியாக மாறிப்போய் கிடக்கும் சமூகத்தில் தான் ஒட்டுக்கொண்டு கிடக்கிறோம்.இதை தொட்ட கருத்துகளையே சிதற வைத்துள்ளார்.

பிக்பாஸ்..

பிக் பாஸ் நிகழ்ச்சியையும் எழுத்தாளர் ராஜசங்கீதனிப் பார்வையுமாக அதில் நம்மை நாமே பார்த்த சூழலையும் விவரித்தபக்கங்கள் இவை.

மனம்,சமூகம் பின் நீங்கள்..

Ego இதில் தான் எத்தனை வகைபடுத்திவிட்டான் இந்த மனுஷன் என ஐந்து நிமிடம் நான் கடந்து வந்த அல்லது நிகழ்கால என் Ego களை சற்று மௌனித்து கண்டேன்..பின்பே அடுத்த பக்கங்களுக்கு செல்ல முடிந்தது.

உறவுகளின் கனம்..

Perfect strangers ஒரு இத்தாலிய படம்.அதை பற்றிய கதை நுணுக்கம்..
நாப் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும் என்று தோன்றியது.எத்தனை படங்கள் பார்பீர்கள் அதை எப்படியெல்லாம் ஒப்பீடு செய்கிறீர்கள்..இன்னுமொன்று எத்தனை மொழிகள் அறிவீர்கள்..இப்படி பட்ட படங்களை இவரின் எழுத்தின் மூலமே பெரும்பாலும் காண்கிறேன்.

இந்துத்துவமா,ஆரியத்துவமா?

ஆரியனின் நுழைவிலிருந்து இன்று வரை நடந்துகொண்டிருக்கும் பலதரப்பட்ட விஷயங்களை தான் முன்வைக்கிறார்..படித்து விட்டு ஆமா உண்மைதானேன்னு சொல்லாம இருக்க முடியுமான்னு சந்தேகம் தான்.

சகாவு..

கம்யூனிஸ்ட் கதை தான்.. படத்தின் கதையை மிக அருமையான எழுத்துக்களின் மூலம் படம் பார்க்க வைத்துவிட்டார் ஒவ்வொன்றிலும் இசையையும் காட்சி திறமைகளையும் இவர் எழுத்தின் மூலமே அறிந்துவிடலாம்.

  1. சுதா

வாசித்து முடித்துவிட்டோம் என மூடிவைத்து விட முடியாதவாறு, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் தொகுப்பு சொக்கட்டான் தேசம். அரசியல், பொருளாதாரம், உளவியல், உலகமயமாக்கல், சினிமா என்று பிராயத்தனப்பட்டு தொகுதிகளாக பகுக்காமல் இயல்பான நடையில் அமையப்பட்டுள்ன கட்டுரைகள்.

ஜல்லிக்கட்டு போராட்டம், டாஸ்மாக் போராட்டம், விவசாயிகள் போராட்டம், இனவெறி, மதவெறி சம்பவங்கள் என அனைத்தையும் வெளியிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு, அரசியலற்ற தன்மையோடு, comfort zoneல் இருந்துக் கொண்டு, ஒரு உச் கொட்டிவிட்டு, மறதி என்ற தேசிய வியாதியில் மறந்து, மறத்து போகும் நமக்கு மருத்துவம் சொக்கட்டான் தேசம்.

பீரோ, கட்டுமரம், முப்பாட்டன் சாமி போன்ற பலப் பகடிகளின் ஊடே தன்னலமின்றி போராடுவோரின் இயலாமை, நிராகரிப்பு, வலி மற்றும் கம்பீரத்தையும் எடுத்துரைக்கும் வரிகளில் வசிக்கத் தொடங்கிவிடுவோம். அவை, தேடல்களின் துவக்கம். பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்வுகளை மிகப் பொருத்தமான திரைப்படங்களுடன் காட்சிப்படுத்தியதற்க்கு 👏👏.

உளவியல் கட்டூரைகளில் எவ்வித தடையுமின்றி, தன் தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்ததால், அவை கண் ணாடியாய் பிரதிபலிக்கின்றன. சொக்கட்டானில் தாயமாக, சினிமாவையும், கமலையும் கொண்டாடும் பதிவுகள்.

Brutally honest and ridiculously knowledged edition. To be never Missed.

3.      JEYANTHI

இவரின் எழுத்துக்களை எப்பொழுதும் ஒரு அச்சதோடான தயக்கத்தில்தான் நான் படிப்பதுண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று உணர்வுகளின் இறுக்கத்தை எழுத்துக்களால் தளர்த்துவிடுவார். மற்றொன்று இவரை படித்து முடிப்பதோடு நிறுத்திவிட முடியாது. தொடர்ந்து குறைந்தது பத்து புத்தகங்களும் பத்து படங்களும் பார்க்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும்.

எழுத்தின் நோக்கமே தேடல். அந்த தேடலை முழுமையாக உணர வைக்கும் படைப்பு எழுத்தாளர் ராஜசங்கீதன் அவர்களின் “சொக்கட்டான் தேசம்”.

சமூகம், அரசியல், சினிமா, உளவியல் என பலதரப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக ‘சொக்கட்டான் தேசம்’ இருந்தபோதும், இதை ஒரு ஆழமான முழு அரசியல் புத்தகமாகவே நான் பார்க்கிறேன். சினிமா மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகளின் தாக்கம் அரசியலையும், அரசியலின் தாக்கம் தனிமனித மற்றும் சமூக வாழ்வியலில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை, மாற்றங்களை இப்புத்தகம் தெளிவாக விளக்குகிறது. அதற்கு உதாரணமாக விளங்கும் சொல்லாடல்கள் தான் ‘virtual reality’, ‘holographic universe’, ‘plugpoint anxiety’, ‘platonic love’, ‘digital suicide’, ‘shared imagination’, ‘irretrievable breakdown’, ‘brand building’, etc

ராஜசங்கீதன் அவர்களின் எளிமையான நடையை தாண்டி, அனுபவங்களும், கோபங்களும், ஆதங்கங்களும், சில நேரங்களில் பெருமித உணர்வுகளும் சிலேடையாய் வெளிப்பட்டிருக்கும் விதம் ரசிக்கவைக்கிறது. வீரமண்டைகள், உங்களின் கோவணங்கள், பன்றிகள், ரத்னம் தேய்ந்து வெறும் ‘மணி’ ஆன கதை போன்ற நையாண்டி தலைப்புக்கள் வாசிப்பிற்கு முன்பே யோசிக்க வைக்கின்றன. அந்த நையாண்டி எழுத்துக்குள்ளும் அவரின் சமூக அக்கறை மட்டுமே வெளிப்படுகிறது.

இதில் சில கட்டுரைகளை முகநூலில் பதிவுகளாக முன்னரே படித்திருந்த போதிலும், ஒரு தொகுப்பாக வாசிக்கும் பொழுது ஒன்றுக்கொன்றான தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறது.

படித்து முடிக்கும் பொழுது இதுவரை சரியென பட்டதெல்லாம் தவறாக தெரியும், கெட்டவர்களாக தெரிந்தவர்களை நண்பர்களாக பார்க்கமுடியும், நம்மை நாமே சுய ஆய்வு செய்து புரிதலடைய முடியும், இது நாள்வரை இருந்ததிலிருந்து சற்று விலகி ஒரு புதுப் பார்வையை நிச்சயமாக ‘சொக்கட்டான் தேசம்’ கொடுத்துவிடும்.

 

மேலும் வாசிக்க

வாசகசாலை

வணக்கம், எங்கள் அனைவருக்கும் முதன் முதலில் முகநூல் வாயிலாகத்தான் இறுக்கமான, இணக்கமான நட்பு உண்டானது.இலக்கிய வாசிப்பை பொதுப்பண்பாகக் கொண்டு அமைந்த ஒரு குழுமத்தின் மூலமே இத்தகைய நட்புகள் கிட்டப்பெற்றன.காலம் சென்றுக்கொண்டே இருக்க, வெறுமனே பேச்சு, பதிவு, அரட்டை என்பதோடு நம் இலக்கிய ஆர்வம் தேங்கிப் போக வேண்டுமா ? என எங்களுக்குள் அடிக்கடி கேள்விகள் ஒவ்வொரு நண்பர்களிடமிருந்தும் வந்த வண்ணமிருந்தது.

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close