சிறுகதைகள்
-
Aug- 2026 -27 August
கே.பி தோழர்! – ராம் சங்கர்
“ஹலோ… பஷீர் எங்க இருக்க?” “ரூம்லதான் இருக்கேன்…” “இன்னைக்கு சாயங்காலம் ஃப்ரீயா?” “ஆமா… எங்க வரணும்!” “கொஞ்சம் தூரமா போகணும்போல இருக்கு!” “எங்க போகணும்?” “அட்டப்பாடி சத்-தர்ஷன் போலாமா? திங்கள்கிழமை திரும்பி வந்துடலாம்!” “சரி…” பஷீரும் சம்யுக்தாவும் சென்னையிலேயே இருந்தாலும், சந்திப்பு எப்பையாவதுதான் நிகழும். அதுவும் சம்யுக்தா ஏதோ ஒரு மனக்கொந்தளிப்பில் மட்டுமே பஷீருக்கு ஃபோன் செய்வது வழக்கம். சம்யுக்தா இடதுசாரிக் கொள்கையின்மீது தீவிரமான பற்றுகொண்டவள். ஆனால், எங்கேயும் தன்னுடைய கருத்தை ஒருபோதும் திணிக்கமாட்டாள். அதேநேரம் தர்க்கத்தின் பக்கம் எப்போதும்…
மேலும் வாசிக்க -
26 August
அதிதி – மா. அண்ணாமலை
அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முகச் சவரம் செய்து ஒரு வாரமாகிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி வழக்கமாக முகச்சவரம் செய்யும் குமார் சலூன் கடைக்குச் சென்றேன். கடையின் பெயர் பலகையின் மேலே, ஸ்ரீ மூகாம்பிகை துணை என்று எழுதியிருந்தது. அது இன்றுதான்…
மேலும் வாசிக்க -
26 August
ஓர்மை – ப்ரிம்யா கிராஸ்வின்
பள்ளிப் பிள்ளைகள் குழு பயிற்சியின்போது கைதட்டுவதைப் போல, எப்போதும் ஒரே சீராக அலையடித்துக் கொண்டு கிடக்கும் அவர்களின் கடல், அன்று வழக்கத்துக்கு மாறாக ஒரு பசிகொண்ட வேட்டை விலங்கினைப் போல உறுமிக்கொண்டு கிடந்தது. வெலங்க வெடித்துக் கிளம்பின செந்நிற அலைகளின் ஆங்காரத்தில் நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்தன…
மேலும் வாசிக்க -
26 August
ராகதேவன் – சேவியர் ராஜதுரை
மாலையில் நடைபெறவிருக்கும் இளையராஜாவின் 50 வது வருட கான்சர்ட்டிற்கு செல்வதற்காக ப்ளா ப்ளா காரில் சிவகாசியிலிருந்து சென்னைக்கு புக் செய்திருந்தான் ராஜா. நேற்று நடந்திருந்த வேலியண்ட்டிற்கே சென்றிருக்க வேண்டும். ஆனால் தற்போது அவன் துவங்கியிருக்கும் சோசியல் மீடியா நெட்வோர்க்கிங் கம்பெனி வேலை…
மேலும் வாசிக்க -
26 August
நீலச்சுடர்- ராஜேஷ் வைரபாண்டியன்
மனிதர்கள் தங்கள் வாழ்நாளை நொடிகளாலும் மணிகளாலும் அளந்து கொள்ளும்போது, மலைகள் தங்களை யுகங்களால் அளந்துகொள்கின்றன. அந்த யுகங்களின் கணக்கை மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் கடிகாரமாகவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மலர்கள் இருந்தன. அதிகாலைப் பனிமூட்டம் தேயிலைச் செடிகளின் தலைகளுக்கு மேல் மெல்லிய…
மேலும் வாசிக்க -
26 August
காலி இருக்கை-பாக்கியராஜ் கோதை
என் பக்கத்து இருக்கைக்கு வரவிருப்பவர் ஒரு பெண் என்று தெரிந்ததும், அந்த இருக்கை எனக்குக் காலியாகத் தோன்றவில்லை. வந்தே பாரத் புறப்படுவதற்கு இன்னும் எட்டு நிமிடங்கள் இருந்தன. “பயணிகள் உடனடியாக ரயிலில் ஏறி அமருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி,” என்ற பெண் குரல் எழும்பூர் நிலையத்தின் இரும்புக் கூரைக்குள் எதிரொலித்து மெல்லக் கரைந்தது. மூடிய கதவுகளுக்குள் குளிரூட்டியின் சீரான உறுமல் கேட்டுக்கொண்டிருந்தது. நடைமேடைக் காற்றில் காஃபியின் மணத்துடன் வெப்பமடைந்த இரும்பின் மணமும் கலந்திருந்தது. எனக்குக் கிடைத்திருந்தது பெட்டியின் கடைசி வரிசையிலிருந்த நடு இருக்கை. நேற்று இரவு பதினொரு மணிக்குத்தான் பயணச்சீட்டு உறுதியானது. திருச்சியில் நடைபெறவிருந்த அலுவலகக் கூட்டத்திற்கு மேலாளர் செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையில் அவருடைய மாமனார் இறந்த செய்தி வந்ததால், அந்தப் பயணம் என்னுடையதாகிவிட்டது. என் வலப்புறமிருந்த ஜன்னல் இருக்கை காலியாக இருந்தது. பயணிகள் பட்டியலில்— ‘V. வித்யா. 32. F.’ பெயர், வயது, பெண்—முகமற்ற மூன்று தகவல்கள். அந்தக் காலி இருக்கையை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். பையை மேலே வைத்தேன். கைப்பேசியை எடுத்தேன். காரணமில்லாமல் பயணிகள் பட்டியலை மறுபடியும் பார்த்தேன். இடப்புற வழியோர இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் தனது கண்ணாடியை மூக்கின் மேல் ஏற்றிக்கொண்டார். கண்ணாடியின் வலது காதுப்பிடி கருநூலால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. சொட்டு நீலம் போட்ட வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார். கால்களுக்கிடையில் வைத்திருந்த துணிப்பையின் உள்ளே கண்ணாடிக் குடுவை ஒன்று இருப்பதுபோல் எதுவோ ஒவ்வொரு அசைவுக்கும் மெதுவாக மோதியது. “திருச்சியா?” என்று கேட்டார். “ஆமாம்.” “நானும் திருச்சிதான். மகள் வீடு. நார்த்தங்காய் ஊறுகாய் கேட்டிருந்தா. அவளுக்கே செய்யத் தெரியாது. கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டு அது ஊறுகாய்னு சொல்றா.” நான் புன்னகைத்தேன். “நீங்க என்ன வேலை?” நான் பதில் சொல்வதற்குள் அவர் ரயில்வே கணக்குப் பிரிவில் முப்பத்தாறு ஆண்டுகள் பணியாற்றிய கதையைத் தொடங்கிவிட்டார். முதல் பத்து ஆண்டுகள் மதுரை, பிறகு திருச்சி, கடைசியில் சென்னை. ஓய்வு பெற்றுப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. பழைய அலுவலகத்தில் அவர் எழுதிய எண்களை இப்போதும் யாராலும் உடனடியாகப் படிக்க முடியாது என்று பெருமையாகச் சொன்னார். என் கைப்பேசி ஒலித்தது. மனைவி. “ரயில் கிளம்பிடுச்சா?” “இன்னும் இல்லை.” “இட்லி பையில இருக்கு. ரயில் சாப்பாடு பிடிக்கலைன்னா—” “சரி.” சிறிது மௌனம். “நேத்து நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லல.” முதியவர் பேசுவதை நிறுத்தாமல், ஊறுகாய்க் குடுவையின் மூடி இறுக்கமாக இருக்கிறதா என்று பையைத் திறந்து பார்த்தார். “இப்ப ரயில்ல இருக்கேன். திரும்பி வந்ததும் பேசிக்கலாம்.” “எப்பவும் அதைத்தான் சொல்றீங்க.” “மீட்டிங்குக்கு பேப்பர் பார்க்கணும். அப்புறம் கூப்பிடுறேன்.”…
மேலும் வாசிக்க -
26 August
லக்க லக்க பேயே! லுக்கு விடாதே! – ஷாராஜ்
1 தர்மபுரி நகர வெளியூர் பேருந்து நிலையத்தை அவர்கள் அடையும்போது அஸ்தமனமாகிவிட்டிருந்தது. அப்போது ஆறே கால். அங்கிருந்து நகரப் பேருந்து பிடித்து இவர்களுக்கான நகரப் பேருந்து நிலையத்தை அடையும்போது ஆறே முக்கால். கருக்கிருட்டு ஆகிவிட்டது. நகருக்குள்ளும், நகருக்கு வெளியிலும், தூரத்துக் கிராமங்களுக்குமாக வீடு திரும்புகிற மக்கள் கூட்டம்…
மேலும் வாசிக்க -
26 August
அவ்ளோ பேலன்ஸ் இல்லப்பா- கமலா முரளி
அர்ச்சனா தனது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாள். “சொல்லுப்பா, ஓ! ஜிபே வா? எவ்ளோ வேணும்?” “…” “ஓ! அவ்ளோ பேலன்ஸ்… இருக்காதே” “…” நான் என் மாமியார்கிட்ட கேட்டுத்தான் அனுப்பணும். சொல்றேன், சரி” உரையாடல் முடிந்தது. அர்ச்சனாவின் மாமியார் பத்மா பக்கத்தில்தான் நின்றுகொண்டிருந்தாள்.…
மேலும் வாசிக்க -
26 August
அலகிலா விளையாட்டு – மாலதி சிவராமகிருஷ்ணன்
அவள் ஓர் ஓவியத்திற்குள் நடந்து போவதைப்போல உணர்ந்தாள். வண்ணங்கள்… வண்ணங்கள்… எங்குப் பார்த்தாலும் வண்ணங்கள்…! மரங்கள் பெரும் கொண்டாட்டத்திலிருந்தன. வெளிர் மஞ்சள், பொன் போல் ஒளிரும் மஞ்சள், அடர் மஞ்சள், வெளிறிய ஆரஞ்சு, நெருப்பில் தெரியும் மஞ்சள் ஆரஞ்சு, பளீர் ஆரஞ்சு,…
மேலும் வாசிக்க -
26 August
நாளைய கேள்வி- இந்திரநீலன் சுரேஷ்
“கேட்ச்……..!” ஃபுல்டாஸை இறக்கிய பவுலரும், அதைத் தவறான திசையில் திருப்பிவிட்ட பேட்ஸ்மேனும் வானத்தைப் பார்த்தார்கள். தனது அரை டிராயரை அவசரமாகத் தூக்கிவிட்டபடி, பந்து பறக்கும் திசையை நோக்கி ஓடிய சிறுவனின் முதுகு ‘விராட்’ என்றது. இந்தக் கேட்சை பிடித்துவிட்டால் முழு டீமும் காலி. அப்போதுதான் அந்தப் பெரிய விமானத்தைப் பார்த்தான். ஏர்போர்ட் அருகிலிருக்கும், இந்தப் புறம்போக்கு…
மேலும் வாசிக்க