கட்டுரைகள்

ஐயப்பனும் கோஷியும். – திரைப்படம் குறித்த கண்ணோட்டம்

- K .M. அபு

                   கடந்த 4 மாத காலமாக மலையாளப்படங்களின் மீதான ஈர்ப்பு என்னை அறியாமலே தொற்றிக் கொண்டது என சொல்லலாம், மெனக்கெடாமல் மண்ணுக்கேற்ற கதை சொல்லும் விதமோ, ஹீரோயினுக்காக அலட்டிக் கொள்ளாமல் அதீத மேக்கப் இல்லாத தினமும் கடக்கின்ற முகங்களைப் போல கதாபாத்திர வடிவமைப்போ, சிக்ஸ்பேக் , ஆட்களைப் பறக்கவிடும் சண்டைக்காட்சி என்று ஹீரோவுக்கென்றே  என்று நாம் உருவாக்கி வைத்துள்ள அந்த எதிர்பார்ப்புகளை உடைப்பதோ அல்லது தனக்கு இருக்கின்ற  சந்தை  என்ன அதற்கு எவ்வளவு முதல் போட முடியும் அந்த முதலுக்குள் எப்படி ஒரு நேர்த்தியான திரைக்கதை அமைக்க முடியும் என்கிற முனைப்போ அல்லது படம் நெடுகிலும் கண்கள் குளிர காட்சிப்படுத்தப்படும் அந்த மலையாளத்து தேசத்தின் பேரழகோ  அல்லது அம்மக்களின் வாழ்வியலைக் காட்டும் விதமோ  இப்படி எதுவோ ஒன்று  உங்களை இந்த கேரளத்து திரைப்படங்களின் பக்கம் இழுத்துவிடும்.

                  முன்டூர் கிராமத்தில் நடக்கிற கும்மாட்டி திருவிழாவில் கும்மாட்டி வேடமிட்டு  நடக்கும் ஒரு கொலைக்காட்சியோடு  தொடங்கும் படம் கட்டப்பனை என்கிற நகரத்தில் எஸ். ஐயப்பனும்  கோஷியும் கைகோர்த்து முடிக்க 2மணி நேரம் .55 நிமிடங்கள்  ஆகிவிடுகிறது.

                  இ.பி.கோவை  மட்டுமே பின்பற்றாமல் எது நீதியோ அதை செவ்வனே செய்து ஊர் மக்களிடமும் அரசாங்கத்திடமும் பெயர்பெற்ற ஆய்வாளர் ஐயப்பனிடம் (பிஜு மோகன் ), ராஜா வீட்டு கன்னுகுட்டி, ராணுவத்திலிருந்து   விஆர்ஸ் வாங்கி விட்டு சனி ஞாயிறு மட்டும் சரக்கடிக்க வேண்டும் மற்ற நாட்களில் கண்டிப்பாக சரக்கடிக்க வேண்டும் என்று சுற்றித் திரியும் ஹவில்தார் கோஷி (பிரித்விராஜ்மதுவிலக்கு அமலில் உள்ள பகுதியில் கையில் மது பாட்டில்களோடு மாட்டிக் கொள்கிறார்  ஸ்டேட்டும் சென்ட்ரலும்  முட்டிக்கிறது போல கோஷிக்கும்  போலீசாருக்கும் கைகலப்பு நடக்கவே ஐயப்பன் கோஷியை கைது பண்ணி சப்ஜெயிலுக்கு  அனுப்புகிறார் . அதுனாலேயே கோஷியுடைய ஈகோ கூடிப்போய் அய்யப்பனைப் பழி வாங்க நினைத்து அவருடைய வேலைக்கு ஆப்பு வைக்கிறார். வேலையை இழந்த ஐயப்பனோ  கோஷியைப் பழிவாங்க கொலைவெறியோடு கிளம்ப, கோஷியுடைய அப்பா எஸ். ஐயப்பனை  பழிவாங்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி  ஐயப்பனுடைய மனைவிமேல் நிலுவையில் இருந்த மாவோயிஸ்ட் வழக்கை தூசி தட்டி கைது பண்ண வைக்கிறார்  இதில் யாருடைய பழிவாங்குதல் படலம் வெற்றிகரமாக முடிந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை:   இல்லை முக்கால் வாசி கதை என்றே சொல்லலாம் .

                     ஒரு பக்காவான பட்ஜெட் கமர்சியல் படம்  என்ன செய்ய வேண்டுமோ அதை கச்சிதமாகச் செய்திருக்கிறார் இயக்குனர் சாச்சி. மூணு மணி நேர படம் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தினாலும் அடுத்து அடுத்து வரும் காட்சிகளில் ஆர்வம் ஆரம்பித்து விடுகிறது. .KGF இல்  ராக்கி பாய்  மாதிரி கோஷிக்கு ஒரு காட்சி இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கோஷியுடைய மொபைல் காண்டாக்ட் செக் பண்ணும் பொழுது. அப்பறம் போலீஸ் வேலையில் இருக்கும் போது  சாந்தமாக இருந்த ஐயப்பன் வேலை போனதும் தன்னோட பழைய கும்மாட்டி ஸ்டைலில் எதிரியை பழிவாங்க வருவதும், கோஷியை  அடிக்கப் போகும் போது  எல்லாக் கதவுகளையும் பூட்டுவதும், அசால்ட்டாக சுவரில் எகிறி குதித்து மேலே போகும்போதும், கோஷியுடைய காரை வெடிமருந்து வைத்து வெடிக்க வைக்கும் போதும் பிஜூ மோகன் எனக்குப் பிடித்த மோகனாகிறார் . இறைவி என்று  பெண்களின் துயரக்கதையைப் பேசும் படம் போலவே, இந்த மூன்று ஈகோ பிடித்த ஆண்களால  அவர்கள் வீட்டுப் பெண்கள் படும் அவதியும் ஒரு தனி டிராக்கில் போகும்.   இந்த படத்தைப் பற்றி எதிர்மறையாக நிறைய பேர் எழுதியிருந்தாலும் எனக்கென்னவோ அந்தளவுக்கு இது ஒதுக்கக் கூடிய படமில்லை என்றுதான் சொல்வேன். ஒரு சினிமாட்டிக்கான முடிவை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம். படம் கொஞ்சம் நீளமும் கூட 

                   இந்த படத்தில் வரும் முதல் பாடல் ஒரு மலைவாழ் பாட்டி பாடியிருப்பார்கள். அந்தப் பாடல் மேக்கிங் வீடியோ கூட  யூட்யூபில் கிடைக்கும் அதில் கடைசியில் அந்தப் பாட்டியிடம் ப்ரித்விராஜ், “ என்னை தெரியுமா? பிஜு மேனன்    யார்ன்னு?  நீங்க பாடியிருக்க பாட்டு எந்த படத்துல ன்னு  தெரியுமா?”  என்று கேட்பார், அதற்கு அந்தப் பாட்டியின் பதிலும் அந்த  சிரிப்பும் உங்களுக்கு பார்த்தால்தான்  புரியும்.

 

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close