கட்டுரைகள்
Trending

‘தமிழ் போற்றதும்!’ – கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

ராஜா ராஜேந்திரன்

தமிழ் வளர்த்த 24 ஆளுமைகள் பற்றி ‘தமிழாற்றுப்படை’   படைத்தாய். ஆனால் அதனை படைத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக அதில் உன் பெயரை சேர்க்காது விடுத்தாய். அதனாலென்ன, தமிழர்களின் எண்ணங்களில் நிரந்தர சிம்மாசனம் பெற்று, கம்பீரமாக அமர்ந்திருக்கிறாயே?  எவரால் இணை வைக்க முடியும் அந்த உச்சபதவிக்கு ?

தமிழே, உன்னிடமிருந்து யாம் கற்ற பாடங்கள் அநேகமுண்டு. ஆடிக்குப் பின்னாலே காவேரி தாங்காதென்றாய் ! ஆடிக்கும், தாங்கமாட்டாக் காவிரிக்கும் காத்திருக்கிறோம். இரண்டும் நெருக்கத்தில்தானுள்ளது. நாவறண்ட சென்னைவாசியாய் என் ஏக்கம் தீர வேண்டும்.காவிரி நீர் சென்னைக்கும் தண்டவாளம் வழியே வந்து தாகம் தீர்க்குமாம் !

“மனசெல்லாம் மார்கழிதான், இரவெல்லாம் கார்த்திகைதான்…”

பேராசானின் இந்த வரிகளில் இருக்கும் அழகிய முரண், அகம் குளிர்ந்தால்தான் புறத்தில் மழை பொழியும்.ஆனால் யதார்த்தத்தில் மழைக்குப் பின்தான் மார்கழி வருகிறது.அதையும் ஆசானே மெய்பிக்கிறார்.

“கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே…?”

இருந்தும் நல்வாழ்க்கைக்கு மார்கழி முந்தவேண்டும்.அது உங்கள் உள்ளங்களில் என்றென்றும் போகாமல் வாசம் செய்ய வைத்துவிட்டால்… கார்த்திகை போல் உங்கள் வாழ்வும் செழிப்பாகும்.அடடா, அதனால்தான் நீ ஆசிரியன், நான் உன் மாணவன் !

நிறைய பேருக்குத் தெரியாது.ஒருசிலருக்கு நினைவிலிருக்கக் கூடும்.சென்னைத் தொலைக்காட்சியில் பெண்களுக்காக நீங்கள் எழுதிய பாடலொன்று.நடிகை ரேவதி நடித்திருப்பார்.உடன் நீங்களும் உங்கள் குரலோடு வருவீர்கள்.

“எத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள்…?”

பெண்களை எந்தளவுக்கு அந்தப் பாடல் வரிகள் தூண்டியிருந்திருக்கும்? அப்போது வீடுகளிலிருந்த அல்லது அக்கம்பக்கம் வீடுகளிலிருந்த ஒரே ஒரு காட்சிப் பொழுதுபோக்குச் சாதனம் தொலைக்காட்சி மட்டும்தானே ? நேற்று கூட தமிழ் தன் பலமறியா யானையென, யானை – முக்காலி கதை ஒன்றைச் சொன்னீர்கள். பெண்களின் சக்தி பற்றி அன்றே சொல்லிவிட்டக் கதைதான் அந்தப் பாடல் !

உன் அகவை ஈராறை ஒருசேர இன்றடைந்திருக்கிறது.  உன் செயல்பாடுகளோ ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ படைத்தபோதிருந்த அந்த மூவாறாய்த்தான் இன்றுமிருக்கிறது !   நூறகவைகளைக் கடந்தாலும் அது அப்படியேத்தான் இருக்கும்.  இருக்கவும் வேண்டும். வேறென்ன வரம் வேண்டும் எனக்கு ?

ராஜா ராஜேந்திரன்
ராஜா ராஜேந்திரன்

தமிழைப் புகழச் சொன்னால் பொழுதுபாராமல் புகழ்ந்த வண்ணமிருப்பேன். போதும். தமிழுள்ளவரை என் தலைவன் வாழ்வான், எம்மானே போற்றி !

குறிச்சொற்கள்
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close